நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சோம்பேறித்தனமாக உணர்ந்தால் உடனே ஜப்பானியர்கள் இதைத்தான் செய்வார்களாம்..!

கெய்ஸென் என்பது ஒரு எளிய நுட்பமாகும், இதை செய்ய உங்கள் வாழ்க்கையில் ஒரு நிமிடம் மட்டுமே தேவைப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்க விரும்பினால் அல்லது ஒரு இசைக்கருவியை வாசிக்க விரும்பினால், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் இலக்குகள், லட்சியங்கள் மற்றும் அபிலாஷைகள் உள்ளன. அவற்றை அடைய, நாம் கடினமாக உழைக்க வேண்டும், நம்மால் ஆன எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இருப்பினும், பெரும்பாலும் நாம் தோற்றுப்போகிறோம் அல்லது நம் இலக்குகளிடம் இருந்து இன்னமும் தூரமாகவே நிற்கிறோம். இதற்கிடையில் ஏதோவொரு இடத்தில் நமக்கு தெரியாமலேயே நாம் சோம்பேறிகளாகி விடுகிறோம்.

நாம் ஒரு புதிய திட்டத்தை மிகவும் ஆர்வத்துடன் தொடங்கினாலும் காலப்போக்கில், அதுசார்ந்த ஆர்வத்தை இழக்கிறோம். வேலையை தள்ளிப்போட வேண்டும் என்கிற எண்ணம் மிகவும் வலுவாக இருப்பதால், பல சமயங்களில் திட்டமிடப்பட்ட ஒரு காரியத்தை நாம் செய்ய தவறுகிறோம். இதுபோல நீங்கள் ஒரு பணியை முடிக்க சிரமப்பட்டால் 'கெய்ஸென்' (Kaizen) என்று அழைக்கப்படும் ஒரு ஜப்பானிய உத்தி உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கலாம்!

'கெய்ஸென்' என்றால் என்ன?

சுய முன்னேற்றத்திற்கான 'ஒரு நிமிடக் கொள்கை' என்றும் அழைக்கப்படும் கெய்ஸென், சோம்பேறித்தனத்தை முறியடித்து குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கான ஒரு ஜப்பானிய நுட்பமாகும். இந்த நடைமுறையின் பின்னணியில் உள்ள கருத்து என்னவென்றால், மக்கள் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் குறைந்தது ஒரு நிமிடமாவது ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என்பதே ஆகும். அதாவது 'கெய்' என்றால் "மாற்றம்" என்று பொருள் மற்றும் 'ஸென்' என்றால் ஞானம் என்று பொருள்.
இது ஜப்பானிய நிறுவனக் கோட்பாட்டாளரும் மேலாண்மை ஆலோசகருமான மசாக்கி இமாய் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இமாயின் கூற்றுப்படி, "எங்காவது ஒருவித முன்னேற்றம் ஏற்படாமல் ஒரு நாளும் செல்லக்கூடாது என்பதே கெய்ஸென் உத்தியின் அடித்தளம் ஆகும். நீங்கள் ஒருமுறை அல்லது இரண்டு முறை கெய்ஸென் செய்ய முடியாது மற்றும் உடனடி முடிவுகளை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் அதை நீண்ட காலத்திற்கு செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இது எப்படி வேலை செய்யும்?

கெய்ஸென் என்பது ஒரு எளிய நுட்பமாகும், இதை செய்ய உங்கள் வாழ்க்கையில் ஒரு நிமிடம் மட்டுமே தேவைப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்க விரும்பினால் அல்லது ஒரு இசைக்கருவியை வாசிக்க விரும்பினால், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும். அதாவது, நீங்கள் எவ்வளவு சோம்பேறியாக இருந்தாலும், ஒரு பணியை முடிக்க, நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு சுறுசுறுப்பாக செயல்பட ஒப்புக்கொள்ள வேண்டும். பெரும்பாலும், நேரம் வீணாகும் என்று கூறி நாம் சில காரியங்களை / வேலைகளை ஒதுக்கி வைப்போம். ஆனால் இந்த ஒரு நிமிட நுட்பத்தில் உங்களால் அப்படி செய்ய முடியாது. ஒரு நிமிடம் தானே! செய்யலாம் என்கிற எண்ணமே மேலோங்கும்; வேலை நடக்கும்!
அவசரப்பட வேண்டாம், ஒரு நேரத்தில், ஒரு நிமிடம், ஒரு வேலை!

கெய்ஸென் என்று வரும்போது, ​​நீங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. உங்கள் நேரத்தில் ஒரு நிமிடத்தை மட்டுமே பங்களிக்கவும். இந்த நடைமுறையை நீங்கள் முடித்தவுடன், நீங்கள் படிப்படியாக குறிப்பிட்ட வேலையில் உங்களின் நேர வரம்பு அதிகரிப்பதைக் காண்பீர்கள், சில சமயங்களில் அதை ஒரு மணிநேரமாகவும் கூட நீங்கள் நீட்டிக்கலாம். வாழ்வின் எந்த நேரத்திலும் எவரும் கையாளக்கூடிய ஒரு நுட்பம் இது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் மற்றும் உங்கள் குறிக்கோள்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வது மட்டுமே.

உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பிற ஜப்பானிய நுட்பங்கள்

ஜப்பானிய கலாச்சாரம் பல பயனுள்ள நுட்பங்களின் மூலமாகும். கெய்ஸென் சோம்பலை முறியடிக்க உதவும் அதே வேளையில், ககேய்போ (Kakeibo) என்பது பணத்தைச் சேமிக்கும் கலை ஆகும். கோன்மாரி (KonMari) என்கிற ஒரு நுட்பமும் உள்ளது, இது வீடுகளை ஒழுங்கமைத்தலை பற்றியது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!