இந்த நாடுகளில் எல்லாம் வரி இல்லை தெரியுமா?
- Get link
- X
- Other Apps
வரி இல்லாத நாட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும். அந்த நாடு அழகிய நாடாகவும் இருந்தால், சொல்லவே வேண்டாம்.
வரி இல்லாத நாட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும். அந்த நாடு அழகிய நாடாகவும் இருந்தால், சொல்லவே வேண்டாம். அப்படிப்பட்ட நாடுகளைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
ஐக்கிய அரபு அமீரகம்
இந்நாடு பலருக்கு இது கனவு. பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு. நாட்டின் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், குடும்பநலம் முதலானவற்றை உயர்தரத்துடன் மக்களுக்கு வழங்குகிறது. இங்கு அதிகபட்ச வருவாய் ஈட்டினாலும் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இந்நாட்டின் ஒட்டு மொத்த வருமானமும் வெளிநாட்டு வங்கிகள், சுற்றுலாப் பயணிகள், எண்ணெய் பொருள்கள் மீதான வரிகள் முதலானவற்றை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
மோனாகோ
உலகத்திலேயே மிக சிறிய நகரங்களில் இரண்டாவது இடம் மோனாகோ ஆகும். இது மெடிட்டரேனியன் கடல் பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கு வாழ்வதற்கான செலவு அதிகமாகும். இந்த நாட்டில் குற்றங்கள் மிகக்குறைவாக நடக்கின்றன. இந்த நாட்டிலும் வரி கிடையாது.
கத்தார்
எண்ணெய் வளங்கள் நிறைந்த நாடு கத்தார். பெர்சிய வளைகுடாவில் உள்ளது இது. கத்தாரில் வருவாய் ஈட்டும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எவருக்கும் வருமான வரி கிடையாது.
கேமேன் தீவுகள்
கேமன் தீவுகள் அரேபியா கடலுக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. இந்த நாட்டில் நிலவரி, பரிசுகளுக்கான வரி, முதலீட்டு ஆதாயத்துக்கான வரி முதலானவை இல்லை..
பஹ்ரைன்
பஹ்ரைன் மிகச் சிறியது. 50 இயற்கையான 22 செயற்கையான குட்டி குட்டி தீவுகளை உள்ளடக்கியது. இது எண்ணெய் வளமிக்க நாடு. நாட்டினுடைய குடிமக்களுக்கு வரிகளை விதிப்பதில்லை. விற்பனை நிலம் முதலீட்டில் இருந்து கிடைக்கக்கூடிய வருவாய் முதலானவற்றுக்கு வரிவிலக்கு உள்ளது. இந்நாடு தமது முழுமையான வருவாயை எரி பொருள் உற்பத்தியின் வாயிலாகவே ஈட்டுகிறது. எண்ணெய் உற்பத்தி எரிவாயு உற்பத்தி முதலானவற்றில் இருந்து பெறக்கூடிய வருவாய்க்கு மட்டும் வரி இருக்கிறது.
தி பஹாமாஸ்
பனை மரங்களால் சூழப்பட்ட வெப்பமண்டலத் தீவுகள் இது. அக்வா கடற்கரையை ஒட்டி இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் இதுவாகும். சுற்றுலாத் துறையினால் அதிக வருவாய் ஈட்டுகிறது. இது பணக்கார நாடுகளில் ஒன்றாகும்.
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் என்ற இரட்டை தீவுகள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் கரீபியன் கடலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இதற்கு எந்தவிதமான வரியும் கிடையாது. இதன் முதன்மை வருவாய் சுற்றுலா ஆகும். வெளிநாட்டவர்களுக்கு பொருளாதாரக் குடியுரிமையும் வழங்குகிறார்கள்.
இந்தப் பட்டியலில் பெர்முடா, ஓமன், குவைத் மற்றும் வனுவாடு ஆகியவையும் அடங்கும். இந்த நாடுகளெல்லாம் மிகவும் மகிழ்ச்சியானவை. மேலும், வரியற்றவை..
ALSO READ : ரூ.12 லட்சம் செலவு செய்து நாயை போல மாறிய மனிதன் - வைரல் வீடியோ
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment