நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகத்திலேயே மிக மோசமான Smartphone இதுதான்! காரணத்தை பாருங்க... புகைப்படங்கள்........

 ஸ்மார்ட்போன்களின் தேவைகள் இன்றியமையாததாகிவிட்டது. பல்வேறு நிறுவனங்கள் பல மாடல்களில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன.


இவற்றில் பல வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது, பல ஈர்ப்பதில்லை. அந்த வகையில் எந்த ஒரு விடயத்திலும் வாடிக்கையாளர்களை ஈர்க்காத உலகளவில் மோசமான ஸ்மார்ட்போன் என பெயர் வாங்கிய போன் குறித்து காண்போம்.

Energizer Power Max P18K (2019ல் வெளியான மோசமான ஸ்மார்ட்போன்)

இந்த நிறுவனம் பவர் பேங்களை விற்பனை செய்வதோடு, ஸ்மார்ட்போன் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் P18K ஐ அறிமுகப்படுத்தியபோது, ​​நுகர்வோரால் அது ஈர்க்கப்படவில்லை.


மேலும் அதன் நீக்க முடியாத Li-Po 18,000 mAh பேட்டரி, மொடலை ஆதரிக்க நுகர்வோர்கள் அந்தளவுக்கு முன் வரவில்லை.

Energizer P18K போனானது 30-40 மிமீ தடிமன் கொண்டது, இது ஸ்மார்ட்போனுக்கு மிகவும் அதிகம் ஆகும். குறிப்பாக இன்றைய நுகர்வோர் மெல்லியவற்றையே விரும்புகின்றனர்

P18K விற்பனை விலை USD$599 என திட்டமிடப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இண்டிகோகோவில் இந்த ஸ்மார்ட்போன் போதுமான ஆதரவைப் பெறவில்லை.


இந்த குறிப்பிட்ட மாடலுக்காக வைத்திருந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்ய இது நிறுவனத்தை கட்டாயப்படுத்தியது. ஏனெனில் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை சுத்தமாக் ஈர்க்கவில்லை.  


இறுதியில் இந்த மாடல் செல்போன் சந்தையில் விற்பனை செய்யப்படுவது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.



ALSO READ : ஆப்பிள் கார்: ஜன்னல்களுக்கு பதிலாக Virtual Reality - அசரவைக்கும் புதிய முயற்சி.....


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்