5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ்.........
- Get link
- X
- Other Apps
நாம் சாப்பிடும் உணவை பொறுத்து தான் உடல் நலமும், பற்களின் தரமும் மேம்படும். அதற்காக அன்றாட உணவில் கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் கண்ட உணவுகளை உட்கொண்டு பற்களை தூய்மையாக வைக்காததால், பற் சொத்தை மற்றும் மஞ்சள் கறை போன்றவற்றை உருவாகிறது.
இந்த கறைகளை போக்க சாப்பிடும் உணவுகளையும், பழங்களையும் வைத்தே சரிசெய்யலாம். கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் பற்களில் உள்ள கறைகளை போக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
அதன்படி, கொய்யா இலைகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கொப்பளித்து வர பற்களில் உள்ள கறைகள் நீங்கும். மேலும், இரவு தூங்க செல்லும் முன் ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை பற்களில் தேய்த்துவிட்டு மறுநாள் காலை எழுந்தவுடன் கொப்பளிக்க வேண்டும்.
இப்படி செய்து வர பற்களின் மேற்புறம் உட்புறம் உள்ள கறைகள் நீங்கிவிடும். அடுத்து, வெள்ளை எள்ளு விதையை, நன்றாக பொடி செய்து பற்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
கிராம்பு பொடியுடன் ஆலிவு எண்ணெய்யை சேர்த்து மிதமான சுடுநீரில் கலந்து கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். முக்கியமாக உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
ALSO READ : காலையில் குடிக்க வேண்டிய அருமையான பானம்! கொழுப்பை கடகடவென கரைக்கும் அற்புதம்......
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment