நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்க உதடு ரொம்ப கருப்பாக உள்ளதா? கவலையை விடுங்க.. இதோ சில அசத்தலான டிப்ஸ்!

 பொதுவாக நம்மில் பலருக்கு முகம் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும், அவர்களுடைய உதடு பார்ப்பதற்கு கருப்பு நிறமாகவோ அல்லது வெளிர் நிறமாகவும், வெலுத்துப் போயிருக்கும்.


நம்முடைய முகத்தின் அழகு நிறைவாக வேண்டும் என்றால், உதடுகள் சிவப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும்.

உதடுகளை இயற்கையான முறையில் சிவப்பு நிறத்திற்கு மாற்ற ஒரு சில எளியவழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். 


  • பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.

  • தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை பலமுறை தடவ வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை மாற்றலாம்.

  •  மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.

  •  எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்- பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் கருமை நீங்கும்.

  • தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.

  • உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால், உடனே உதட்டின் வறட்சி நீங்கி, நிறம் மாறுவதைக் காணலாம்.

  •  கெமிக்கல் கலந்த லிப்-பாமை பயன்படுத்துவதற்கு பதிலாக, கிளிசரினைத் தடவி வந்தால், உதட்டை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்து, கருமையை போக்கும்.

  • சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கியும், தேன் ஈரப்பசையையும் கொடுக்கும்.

  •  தினமும் பீட்ரூட் துண்டை உதட்டில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், உதடு நாளடைவில் அழகான நிறத்தை பெறும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்