நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஏன் நாய்கள் எப்போதும் கம்பங்கள், கார் டயர்களில் சிறுநீர் கழிக்கின்றன?

நாய்களின் இந்த நடத்தை குறித்து நாய் நிபுணர்கள் மிகவும் முழுமையான ஆய்வு ஒன்றை செய்துள்ளனர்.
நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி பார்க்கும் பல விஷயங்கள் உள்ளன, ஆனால் அவற்றின் பின்னணியில் உள்ள காரணத்தை பற்றி அறிய பெரிய அளவிலான முயற்சிகளை எடுபப்தில்லை. வீட்டிலோ அல்லது வெளியிலோ கூட இந்த விஷயங்களை நாம் ஒவ்வொரு நாளும் கவனிக்கிறோம். நாம் அவைகளை அடிக்கடி பார்க்கிறோம், இன்னும் சொல்லப்போனால் ஆவிகள் நம் கண்கள் மிகவும் பழகிப்போன விஷயங்களாக கூட மாறிவிடும். இருந்தாலும் கூட அவற்றின் பின்னணியில் உள்ள காரணத்தை பற்றி அறிய நாம் முயற்சிப்பதே இல்லை. அப்படியான ஒரு விடயம் தான் - நாய்கள் டயர்கள் அல்லது கம்பங்களில் சிறுநீர் கழிப்பது!

என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? நாய்கள் ஏன் சிறுநீர் கழிக்க பெரும்பாலும் "இந்த இரண்டு இடங்களையே" அதிகம் பயன்படுத்துகின்றன? இதற்கு பின்னால் ஏதாவது காரணம் இருக்குமா? இல்லை நாய்களுக்கு மத்தியில் இது தற்செயலாக உருவான ஒரு பழக்கமா? நாய்களின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக தற்செயலானதொரு பழக்கம் அல்ல; நாய்கள் இப்படி செய்ய ஒரு காரணம் அல்ல, மொத்தம் மூன்று காரணங்கள் உள்ளன!

நாய்களின் இந்த நடத்தை குறித்து நாய் நிபுணர்கள் மிகவும் முழுமையான ஆய்வு ஒன்றை செய்துள்ளனர், அதன் ஆய்வின் அடிப்படையில் அவர்களுக்கு கிடைத்த மூன்று காரணங்கள் இதோ:

1. கம்பம் அல்லது டயரில் சிறுநீர் கழிப்பதன் மூலம் நாய்கள் தங்கள் பிரதேசத்தை 'மார்க்' செய்கின்றன; அதாவது இது என்னுடைய இடம் என்று சிறுநீர் மூலம் குறிக்கின்றன. இது அவர்களின் மற்ற "தோழர்களை" தொடர்புகொள்வதற்கான ஒரு வழியும் கூட. ஒரு நாய் ஒரு கம்பத்திலோ அல்லது டயரிலோ சிறுநீர் கழிக்கும் போது, ​​அந்த கம்பம் தூண் அல்லது அந்த டயரில் உள்ள சிறுநீர் வாசனையை கண்டறியும் மற்ற நாய்களுக்கு அது ஒரு தகவல் ஆகும். அதை தொடர்ந்து புதிய நாயும் அங்கேயே தன் முத்திரை பதிக்கும்.

2. நாய்கள் கிடைமட்ட பரப்புகளில் சிறுநீர் கழிப்பதை விட செங்குத்து பரப்புகளில் சிறுநீர் கழிப்பதை விரும்புகின்றன. டயர் மற்றும் கம்பத்தின் கீழ் பகுதி நாயின் மூக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. எனவே, அவை மற்ற நாய்களுக்கும் மூக்கு எட்டும் மட்டத்தில் தங்கள் அடையாளத்தை விட்டுச் செல்கின்றன. மேலும் ரப்பர் டயரில் நாயின் சிறுநீர் வாசனை நீண்ட நேரம் இருக்கும். மறுகையில், நாய்கள் தரையில் சிறுநீர் கழித்தால், அவற்றின் வாசனை குறுகிய காலத்தில் காணமால் போகும்.

3. நாய்கள் ரப்பர் டயர்களில் சிறுநீர் கழிப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. நாய்களுக்கு ரப்பர் வாசனை என்றால் மிகவும் இஷ்டம். அதனால் தான், டயர் வாசனையால் கவரப்பட்டு, அதன் அருகே சென்று சிறுநீர் கழித்த பின் திரும்புகின்றன.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்