நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாட்ஸ்-அப்பில் கேஸ்பேக்..!சலுகையைப் பெற என்னசெய்ய வேண்டும்?

 வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களை வாட்ஸ்அப் பேமெண்ட்டுகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கில், தனது அப்ளிகேஷன் மூலம் பணம் அனுப்பும் பயனருக்கு ரூ.35 கேஷ்பேக் வழங்குகிறது.

கூகுள்பே, போன்பே, பேட்டியம் போன்ற பல்வேறு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலிகள் பெருவாரியான மக்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமுக செய்தி இணையதளமான வாட்ஸ்-அப்பும் தனது அப்ளிகேஷனில் பேமெண்ட்டு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் பல கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ் அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பேமெண்ட்டு வசதியானது பொதுமக்களிடம் பெரிதும் கவனம் பெறாத நிலையில், அதனை பயனர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கில், தனது அப்ளிகேஷனில் உள்ள பேமெண்ட் வசதிகளை பயன்படுத்தி அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்ற பணம் மூன்று வெவ்வேறு தொடர்புகளுக்கு பணம் அனுப்புவதன் மூலம் 35 கேஷ்பேக் ரிவார்டுகளை மூன்று முறை மட்டும் பெறலாம் என தெரிவித்துள்ளது.


இதனை தனது கேள்விகள் பக்கத்தில் தெரிவித்த வாட்ஸ்அப் நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான வாட்ஸ்அப் பயனர்களுக்கு கேஷ்பேக் பயன் தொடர்பான பரிசு ஐகானை வழங்குகிறோம் என தெரிவித்துள்ளது.

இந்த கேஷ்பேக் ஐகானை பயனர்கள் பெற்றவுடன் பேமெண்ட்டு வசதிகளுக்கு தகுதியான பதிவுசெய்யப்பட்ட  வாட்ஸ்அப் தொடர்புக்கு பண பரிவர்த்தனை செய்வதன் முலம் ரூ.35 கேஷ்பேக்கைப் பெற முடியும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பணம் செலுத்தும் கேஷ்பேக் ஐகானை வெவ்வேறு பயனர்களுக்கு வெவ்வேறு நேரங்களில் கிடைக்கும் என்பதையும் WhatsApp தனது பயனர்களுக்கு தெரிவித்துள்ளது.

மேலும் இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த கேஷ்பேக் சலுகை கிடைக்கும். இவ்வாறு கேஷ்பேக் சலுகையை பெற குறைந்தபட்ச கட்டணம் எதுவும் இல்லை.


இதற்கு குறைந்தது 30 நாட்களாக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த வேண்டும், மற்றும் சமீபத்திய வாட்ஸ் அப் அப்ளிகேஷனை வைத்து இருக்க வேண்டும்.

கேஷ்பேக் விளம்பரத்திற்கு வாட்ஸ்அப் பிசினஸ் தகுதி பெறவில்லை.

QR குறியீடு பரிவர்த்தனைகளுக்கு இந்த கேஷ்பேக் பயன் வழங்கப்படாது. 



ALSO READ : எதிரே இருப்பது என்னவென்று தெரிவித்து பார்வை மாற்றுத்திறனாளிக்கு உதவும் 'பி மை ஐஸ்' செயலி.....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்