நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Smart Phone-ல் சிக்னல் பிரச்சனை வருதா? சிக்னலை பூஸ்ட் செய்ய இப்படி செய்தால் போதும்.......

 ஸ்மார்ட்போன் இல்லாத ஆட்களை காண்பதே அரிது என்றாகிவிட்டது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் ஏற்படும் ஒரு எரிச்சல் அதில் சிக்னல் கோளாறு ஏற்படுவது தான்.


இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம் குறைவது, அழைப்புகளின் போது ஓடியோ தரம் குறைவது போன்று பல்வேறு பிரச்சனைகள் எழும்.

சிக்னல் அளவை பூஸ்ட் செய்யும் முறைகளை பார்ப்போம்

ஸ்மார்ட்போன் ஆன்டெனா

ஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்ற நிலை பெரும்பாலும் தடிமனான மற்றும் ரக்கட் வகை மொபைல் கேஸ்களில் அதிகம் ஏற்படும். இதனால் மொபைல் போனின் ஆன்டெனாவை மொபைல் கேஸ் மறைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


டவர்

செல்போன் டவர் பிரச்சினையை ஓரளவு அகற்ற ஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம். இரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும். 

சிம் கார்டு

சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் கூட செல்போன் சிக்னல் குறைவதற்கு காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம். இவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகலாம்.


பேட்டரி

பேட்டரி அளவு குறையும் போது மொபைல்போன் பேட்டரி சேமிக்கப்படும் வகையில் அவை உருவாக்கப்படுகின்றன. பொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே அவற்றின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே. இதுபோன்ற சூழல்களில் ஆப்ஸ், ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்தால் அது பலன் அளிக்கும்.



ALSO READ : இனி யாருக்கும் தெரியாமல் வெளியேறலாம்...வாட்ஸ்-ஆப் புதிய அறிமுகம்!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்