நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாட்ஸ் அப்பில் Chat பண்ணுவீங்களா? அதில் அறிமுகமாகும் சூப்பர் அப்டேட்... கசிந்த புகைப்படம்

 வாட்ஸ்அப் நிறுவனம் chat filter என்ற புதிய அசத்தலான அப்டேட்டை அறிமுகப்படுத்தும் நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் கசிந்துள்ளது.


WABetaInfo தகவலின்படி, இந்த புதிய சாட் பில்டர் , டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கவுள்ளது. அதில், unread chats, contacts, non-contacts and groups என நான்கு விதமான ஆப்ஷன் வழங்கப்படுகின்றன.

இதன்மூலம் சாட்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும். ஸ்கிரீன்ஷாட் படி, டெஸ்க்டாப்பில் சேர்ச் பாரை டேப் செய்ததும், பில்டர் பட்டன் பிசினஸ் கணக்குகளில் தெரியவரும்.

எதிர்காலத்தில், இந்த வசதி சாதாரண பயனர்களுக்கு வழங்கப்படலாம். 

சாட் பில்டர் ஆப்ஷன் தற்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா v2.2216.40 பயனர்களுக்கு இது முதலில் வருகிறது.


ALSO READ : கணினி திரையும்.. பார்வை பிரச்சினையும்..

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்