நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மர்மமான பெர்முடா பயணம் மேற்கொள்ள தயாரா; கப்பம் நிறுவனத்தின் பகீர் ஆஃபர்........

 Bermuda Triangle: . சுமார் 5,00,00 சதுர மைல்கள் அளவிற்கு பரவியுள்ள இந்த புதிர் நிறைந்த பகுதியின் மர்மம், பல ஆண்டு காலங்களாக விலகாமலேயே உள்ளது.


  • கப்பல்களையும் விமானங்களையும் விழிங்கும் பெர்முடா முக்கோணம்.
  • சுற்றுலாவாசிகளை கவருவதற்காக சொகுசு கப்பல் நிறுவனம் ஒன்று புதிய யுக்தியை கையாண்டுள்ளது.
  • கப்பல் மட்டுமல்ல, இந்த பகுதியின் மேலே பறக்கும் விமானங்கள் கூட காணாமல் போகின்றன.



உலகில் ஆங்காங்கே பல மர்மங்கள் சிதறிக்கிடக்கின்றன. அதில் பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பகுதி தான் பெர்முடா முக்கோணம், அதாவது Bermuda Triangle. 

அமெரிக்காவில் உள்ள புளோரிடா, பெர்முடா, புவர்டோ ரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தான் பெர்முடா முக்கோணம் அதாவது Bermuda Triangle என கூறுகிறார்கள். சுமார் 5,00,00 சதுர மைல்கள் அளவிற்கு பரவியுள்ள இந்த புதிர் நிறைந்த பகுதியின் மர்மம், பல ஆண்டு காலங்களாக விலகாமலேயே உள்ளது.

இதை சிலர் பாதாள உலகிற்கான கதவு என்கிறார்கள், இதை சிலர் இயல்பிற்கு மாறான மர்மமான பகுதி என்கிறார்கள். இது தொடர்பாக பல பாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

இப்பகுதிக்கும் வரும் கப்பல் மட்டுமல்ல, இந்த பகுதியின் மேலே பறக்கும் விமானங்கள் கூட காணாமல் போகின்றன என்றால் ஆச்சர்யமும் பீதியும் தோன்றுகிறது அல்லவா...

15ம் நூற்றாண்டு முதல் தொடரும் இந்த மர்ம கதையில், இது வரை சுமார் 100க்கும் மேற்பட்ட கப்பல்கள், சுமார் 75 விமானங்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சுற்றுலாவாசிகளை கவருவதற்காக சொகுசு கப்பல் நிறுவனம் ஒன்று புதிய யுக்தியை கையாண்டுள்ளது. ஏன்சியன்ட் மிஸ்டீரிஸ் குரூஸ் என்ற கப்பல் நிறுவனம் ஒன்று பயணிகளுக்கு பகீர் ஆஃபர் ஒன்றை அறிவித்து உள்ளது. அதில், பெர்முடா முக்கோண பகுதிக்கு செல்லும்போது மறைந்து போனால், முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என சொகுசு கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது. ஆனால், அதனை யாருக்கு தருவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆளே இல்லை என்றால், பணம் கொடுப்பதால் என்ன பயன் என நெட்டிசன்கள் கேஎள்வி எழுப்பியுள்ளனர். 

அடுத்த ஆண்டு மார்ச்சில், தொடங்கவுள்ள இந்த சுற்றுலா பயணத்தில், நியூயார்க் நகரில் இருந்து தொடங்கி பெர்முடா நோக்கி செல்லும் இந்த கப்பலில் பயணிகள் ஒரு சிறிய அறையில் தங்குவதற்கு 1,450 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்படும் என ஒரு விசித்திரமான வாக்குறுதியை அளித்துள்ளது.

Ancient Mysteries Cruise என்ற நிறுவனம் தனது விளம்பரத்தில், 'இந்த பெர்முடா முக்கோண சுற்றுப்பயணத்தில் நீங்கள் காணாமல் போனால்,  100% பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதம் உள்ளது. எனினும் நீங்கள் காணாமல் போவதற்கான வாய்ப்பு குறைவு’ என அறிவித்துள்ளது.

15ம் நூற்றாண்டில் தொடங்கிய பெrமுடா முக்கோண மர்மம் தற்போது வரை நீடிக்கிறது. இது குறித்து ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள், செயற்கை கோள் படங்களை ஆதாரமாக வைத்து, சில கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அந்த முக்கோண பகுதியில் மேலுள்ள மேகங்கள் வெடிக்கின்றன என்றும், அதனால், 45 அடி அளவிற்கு அலைகள் எழும்புவதால், இதனை தாக்குபிடிக்க முடியாத கப்பல்களும் விமானங்களும் கடலுக்கடியில் போயிருக்க கூடும் என கூறுகின்றனர்.


ALSO READ : நீங்கள் பார்ப்பது முதலையா? தீவா? இந்த படம் உங்க ஆளுமை பற்றி என்ன சொல்லுது பாருங்க!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!