நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எல்லா பிளேடுகளின் நடுப்பகுதியும் ஏன் ஒரே மாதிரியான வடிவமைப்பை பெற்றுள்ளன தெரியுமா?

 1901 ஆம் ஆண்டில் வில்லியம் நிக்கர்சன் (William Nickerson) என்பவரின் உதவியுடன் ஜில்லெட் நிறுவனத்தின் நிறுவனர் ஆன கிங் கேம்ப் ஜில்லெட்டால்.


எப்போதாவது ஷேவிங் செய்யும் போது ஏன் எல்லா பிளேடுகளும் ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன, அதாவது எல்லா நிறுவனங்களின் பிளேடுகளுமே ஏன் அதன் நடுப்பகுதி முழுவதுமாக ஒரே மாதிரியான வெற்றுத் துளைகளை பெற்றுள்ளது என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா?

நீங்கள் இந்தியாவில் இருந்தாலும் சரி அல்லது ஏதோவொரு வெளிநாட்டில் உள்ள ஏதோவொரு ஒரு வீட்டில் இருந்தாலும் சரி, நீங்கள் காணும் ஒவ்வொரு பிளேடின் நடுவிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் உள்ள துளையை தான் காண்பீர்கள். இது தற்செயலான ஒரு நிகழ்வு அல்ல. இதற்குப் பின்னால் ஒரு சிறப்பானக் காரணம் இருக்கிறது. அதை புரிந்து கொள்ள, நீங்கள் பிளேட்டின் வரலாற்றை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

1901 ஆம் ஆண்டில் வில்லியம் நிக்கர்சன் (William Nickerson) என்பவரின் உதவியுடன் ஜில்லெட் நிறுவனத்தின் நிறுவனர் ஆன கிங் கேம்ப் ஜில்லெட்டால் தான் முதன்முதலில் பிளேடு செய்யப்பட்டது. அதே ஆண்டில், அவர் பிளேடுக்கான காப்புரிமையும் பெற்றார், பின்னர் அதன் பிளேடின் உற்பத்தி 1904 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டில் சுமார் 165 பிளேடுகள் செய்யப்பட்டன.

அந்த காலத்தில், பிளேடிற்கு ஷேவிங் செய்வதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. எனவே தான் ஒரே மாதிரியான "அந்த 3 துளைகள்" தேவைப்படும் ஜில்லெட் ரேஸருக்கு பொருந்தும் வகையில் பிளேடுகள் வடிவமைக்கப்பட்டது. அது மட்டுமின்றி அப்போது ஜில்லெட் மட்டுமே ஷேவிங் ரேசர்களையும் தயாரித்தார். இதன் காரணமாக, ஜில்லெட் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அதன் பிளேட்களை வடிவமைத்தது.

இருப்பினும், பிற்காலத்தில், பல நிறுவனங்கள் பிளேட் வியாபாரத்தில் இறங்கினாலும் கூட, ஜில்லெட் மட்டுமே ரேசர்களின் ஒரே உற்பத்தியாளராக இருந்தது. எனவே மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் பிளேடுகள் கூட ஜில்லெட் ஷேவிங் ரேசர்களுக்கு பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் உருவானது.

காலம் மாறியது; நேரம் மாறியது மற்றும் ஒரு காலத்தில் ஷேவிங் செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்ட பிளேடுகள் மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட தொடங்கின, ஆனால் பிளேடின் வடிவமைப்பு மட்டும் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை, அப்படியே தன இருந்தது. ஒருகாலத்தில் ஆண்டுக்கு சுமார் 165 என்கிற எண்ணிக்கையிலேயே தயார் ஆன பிளேடுகள் இன்றைய காலத்தில், தினமும் சுமார் 1 மில்லியன் என்கிற எண்ணிக்கையை எட்டி உள்ளது. ஆனாலும் கூட அவை அனைத்தும் ஒரே வடிவமைப்பையேக் கொண்டுள்ளன.

அறியாதோர்களுக்கு ரேஸர்கள் வருவதற்கு முன்பு, நம் முன்னோர்கள் தத்தம் முடியை சருமத்தில் இருந்து "வெளியேற்ற" தண்ணீர் மற்றும் கூர்மையான சில "கருவிகளையே" பயன்படுத்தினர். கிமு 3000 வாக்கில் செப்பு கருவிகள் உருவாக்கப்பட்ட போது தான், ​​செப்பு ரேஸர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வரலாற்று தகவலின் வழியாக தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் அழகியல் அணுகுமுறையின் யோசனை கிமு 3000 வாக்கிலே தொடங்கி இருக்கலாம் என்பதையும் நம்மால் அறிய முடிகிறது.


ALSO READ : 50 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2 கோடிக்கு ஏலம் போன சாண்ட்விச்சிற்கு ஈடாக கிடைத்த ஓவியம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்