நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகப்பரு முகத்தின் அழகையே பாழாக்குகிறதா?கவலையை விடுங்க.. இதனை எளிய முறையில் கூட போக்கலாம்!

 பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள்.

இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு செய்யும்.

அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும். இதற்காக பலர் கண்ட கண்ட கிறீம்களை வாங்கிப்போடுவதுண்டு.

ஆனால் இது பக்கவிளைவுகளே தான் ஏற்படுத்தும். இதனை எளிய முறையில் கூட போக்கலாம்.தற்போது அவற்றை பார்ப்போம். 


  • நல்ல தரமான ரோஸ் வாட்டர் மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட் எடுத்துக் கொள்ளவும். முகத்தில் மெதுவாக தடவவும். தினசரி இரு முறை இதை செய்யவும். 

  • மஞ்சள், தயிர் இரண்டையும் குழைத்து பேஸ்ட் ஆக்கவும். முகத்தில் சமமாக பூசவும். 15-20 நிமிடங்கள் கழித்து, கழுவவும்.

  • சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டருடன் கலந்து குழைக்கவும். உங்கள் நெற்றி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.

  • சில வேப்பிலைகளை எடுத்து நன்கு கழுவவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அந்த இலைகளைப் போட்டு, அடுப்பை லேசாக எரிய விட்டு சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். அந்த நீரின் நிறம் மாறத் தொடங்கும் பொழுது அடுப்பை அணைத்து விடவும். அந்த நீரை ஆற விடவும் பின் வடிகட்டி அந்த நீரில் தினமும் முகத்தை கழுவவும்.

  • இரண்டு மேசைக் கரண்டி வெள்ளரிச் சாருடன் ஒரு மேஜைக்கரண்டி பால் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஒரு பருத்தி பஞ்சு பந்தை இந்த சாறில் முக்கி முகத்தை துடைக்கவும். இது உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்ய உதவும்.   




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!