உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது. ஆனால், நிரந்திர புன்னகையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதை கேட்க ஆச்சர்யமாக உள்ளது இல்லையா...
- Bilateral Microstomia என்னும் அரிய நோய்.
- உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது.
- எனது கர்ப்ப காலம் முழுவதும் நான் மிகவும் எச்சரிக்கையாகத் தான் இருந்தேன் என்கிறார் தாய்.
உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது. ஆனால், நிரந்திர புன்னகையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதை கேட்க ஆச்சர்யமாக உள்ளது இல்லையா... வாழ்க்கையில் இதுபோன்ற பல விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன. சமீபகாலமாக அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Bilateral Microstomia என்னும் அரிய நோயினால் நிரந்தர புன்னகையுடன் பிறந்த குழந்தையின் படம் மிகவும் வைரலாகி வருகிறது. படத்தில் காணப்படும் அந்த குழந்தை, பிறவிக் கோளாறு காரணமாக, முகத்தில் புன்னகை நிரந்திரமாகி விட்டது. இந்த பெண் குழந்தை டிசம்பர் 2021ல் பிறந்தது. அதன் பெயர் அய்லா சமர் முச்சா இந்த குழந்தை பைலேடர்ல் மைக்ரோஸ்டோமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண் குழந்தை அபூர்வ பிறவி குறைபாடுடன் பிறந்துள்ளது. இது மிகவும் அரிதான நோயாகும். இது முக அழகையும் வாயின் செயல்பாட்டையும் பாதிக்கிறது.
இந்த நோயால், சிறுமியின் முகத்தின் அமைப்பு, குழந்தை எப்போதும் புன்னகையுடன் இருப்பது போல் தெரிகிறது.
இந்த ஆபூர்வமான நோய் குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், குழந்தைக்கு அரிய நோய் பற்றி கர்ப்ப காலத்திலேயே ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் எனக்கும் என் கணவருக்கு இது பற்றி எதுவுமே தெரியவில்லை. மேலும் இதுபோன்ற ஒரு கோளாறால் பாதிக்கப்பட்ட எந்த குழந்தையையும் இது வரை நாங்கள் பார்த்தே இல்லை. இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்றார்.
அய்லாவின் பெற்றோர் குழந்தைக்கு சிறந்த வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளது. நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் பேசி வருகின்றனர். அய்லா வளரும்போது அவளது முகமும் வாயும் சரியாக செயல்படுவதை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
2007 ஆம் ஆண்டு Cleft Palate-Craniofacial Journal நடத்திய மருத்துவ ஆய்வில், உலகம் முழுவதும் 14 குழ்ந்தைகளுக்கு மட்டுமே இந்த நோய் இருப்பதாக பதிவாகியுள்ளது ஆனால் ஃபிளிண்டர்ஸ் மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் முதல் முறையாக இந்த நோய் பாதிப்பை கண்டறிந்ததாக கூறுகின்றனர்.
"ஒரு தாயாக, நன் கர்ப்ப காலத்தில் நான் எங்கே தவறு செய்தேனா என நினைத்து நினைத்து பார்க்கிறேன். அப்படி எதுவும் எனக்கு தோன்றவில்லை. குறிப்பாக எனது முழு கர்ப்பம் முழுவதும் நான் மிகவும் எச்சரிக்கையாகத் தான் இருந்தேன்" என்று அவர் மேலும் கூறினார்.
ஆனால் இது பெற்றோர்களின் தவறின் காரணமாக ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தம்பதியினரை சமாதானப்படுத்தினர்.
Comments
Post a Comment