நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் தனிமையான தபால் நிலையத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த துணிச்சலான பெண் - யார் இவர்?

 நீண்ட காலமாக தொலைந்து போன தபால் நிலையத்தை மீண்டும் கொண்டு வர, மிஸ் ஜாங்கும் அவரது நண்பரும் அந்த இடத்தை மீண்டும் உருவாக்க உதவுமாறு சிலரை அணுகினார்கள்.


உலகின் தனிமையான தபால் நிலையம் மங்கோலியா நாட்டில் உள்ள டெங்கர் பாலை வனத்தில் அமைந்துள்ளது. குன்றுகளால் சூழப்பட்ட, இந்த டெங்கர் பாலைவனத்தின் மர தபால் அலுவலகம் 15 சதுர மீட்டரில் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. எனவே இதற்கு அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதில்லை. எனினும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்த இந்த தபால் நிலையத்திற்காக ஒரு பெண் போராட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி சமீபத்தில் ஒரு சில நபர்களால் இந்த அஞ்சல் அலுவலகம் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக இன்டர்நெட்டின் உதவியால், இப்போது வியக்கத்தக்க வகையில் இந்த தபால் நிலையம் பரபரப்பாக இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக எந்த மனித தொடர்பும் இல்லாமல், மங்கோலியாவின் இந்த பாலைவன அஞ்சல் அலுவலகம் ஒரு பணியாளரையோ அல்லது பார்வையாளரையோ கொண்டு இருந்ததில்லை. இருப்பினும், ஆச்சரியப்படும் விதமாக, டிசம்பர் 2021 ஆம் ஆண்டில் இந்த தபால் நிலையத்தில் இருந்து சுமார் 20,000 கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன.

இது பலருக்கும் ஆச்சரியத்தை தரும் விதமாக அமைந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்று பலரும் நினைத்து வந்தனர். இந்த தொலைதூர அஞ்சல் அலுவலகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க செய்ய கூடிய பிரச்சாரத்தை மிஸ் ஜாங்கின் என்கிற பெண் ஒருவர் தான் முன்னெடுத்தார். இவரால் தான் இந்த தபால் நிலையத்திற்கு மீண்டும் உயிர் வந்துள்ளது. மெயின் ரோட்டில் இருந்து தபால் நிலையம் 10 கி.மீ தொலைவில் உள்ளதால் இங்கு ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்ததில்லை. ஆனால் அதன் இருப்பு மக்களுக்குத் தெரிந்தவுடன், எல்லா தடைகளையும் தாண்டி பலர் இங்கு வரத் தொடங்கினர்.

மிஸ் ஜாங் மற்றும் அவரது நண்பர் லுவோ மெங் ஆகியோர் உலகின் தனிமையான தபால் நிலையத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர்களது முயற்சிகளை தொடங்கினர். இது மற்றொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இவர்கள் இருவரும் அந்த இடத்திற்குச் செல்லாமலே உலகின் தனிமையான தபால் நிலையத்திலிருந்து கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகளை மக்களுக்கு அனுப்பியதால், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின் போது தகவல்தொடர்பு அதிகரித்தது. மேலும் மிஸ் ஜாங் மற்றும் அவரது நண்பர்கள் சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வரும் ஆன்லைன் கோரிக்கைகளை சரிவர பார்த்து கொள்ள முடியவில்லை.

நீண்ட காலமாக தொலைந்து போன தபால் நிலையத்தை மீண்டும் கொண்டு வர, மிஸ் ஜாங்கும் அவரது நண்பரும் அந்த இடத்தை மீண்டும் உருவாக்க உதவுமாறு சிலரை அணுகினார்கள். அதன் பிறகு, 20 நாட்களில் அதற்கான கட்டமைப்பை முடித்தவுடன், இருவரும் சீனாவில் உள்ள 700 தபால் நிலையங்களில் இந்த தனிமையான தபால் நிலையத்தை சேர்க்க சீனாவின் தபால் துறையிடம் விண்ணப்பித்தனர். பல்வேறு மதிப்பாய்வுகளுக்கு பிறகு, இவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மிஸ் ஜாங் என்கிற பெண்மணியின் போராட்டத்தின் வெளிப்பாடாக, இப்போது கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகள் இந்த தபால் நிலையத்தில் இருந்து உலகம் முழுவதும் அனுப்பப்படுகின்றன.



ALSO READ : வைரலாகும் மேங்கோ மேகி ரெசிபி... இந்த வீடியோவை பார்த்தா உங்களுக்கே தெரியும்..!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!