இனியவை 40 : உங்கள் வாழ்வை மேம்படுத்த சில வழிகள் !
- Get link
- X
- Other Apps
அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களை தவறாமல் செய்தால் உங்கள் வாழ்க்கை மேம்படும்.
அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களை தவறாமல் செய்தால் நம் வாழ்க்கை மேம்படும். அப்படியான நாற்பது விஷயங்களை இங்கே பகிர்ந்திருக்கிறோம்.
1. திங்கட் கிழமை இரவு உடற்பயிற்சி செய்யுங்கள். ஞாயிறு கொண்டாட்டத்திற்கு பிறகு வரும் திங்கள் இரவில் வேடிக்கையாக எதுவும் நடக்காது.
2. அலுவலகத்திற்கு பழங்களை கொண்டு வாருங்கள். பழங்களை படுக்கைக்கு கொண்டு செல்லுங்கள்.
3. மற்றவரோடு முரண் வரும் போது ஒவ்வொருவருக்கும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு கண்மூடித்தனமான புள்ளி இருக்கும். அதில் உங்களுடையது எது என்பதை கண்டுபிடித்து அதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
4. வீட்டில் பியூஸ் போன பல்புகளை அழகாக்கி ஒரு மண் தொட்டியில் நடுங்கள். ஒரு அலங்காரச் செடி தயார்.
5. குறுஞ்செய்திக்கு பதிலாக குரல் பதிவை அனுப்புங்கள். அவை தனிப்பட்ட மினி பாட்காஸ்ட்களைப் போல ஒலிக்கும். ஒரு எதிர்கால பாட்காஸ்ட் நட்சத்திரம் உருவாகிறார்.
6. பறவை தீவனத்தை சமையலறை ஜன்னலுக்கு வெளியே வைத்திருங்கள். நீங்கள் பாத்திரம் கழுவும் போது உங்களுக்கு கம்பெனி கிடைக்கும்.
7. உங்கள் கத்திகளை கூர்மை தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். காய், பழம் நறுக்கும் போது எரிச்சல் வராது.
8. வேலையில் சலிப்பை உணர்கிறீர்களா? பொமோட்ரோ நுட்பத்தை முயற்சிக்கவும். 25 நிமிடம் வேலை. பிறகு ஐந்து நிமிடம் பிரேக். இப்படியே தொடருங்கள். இதுதான் பொமோட்ரோ.
8. ஒரு வெங்காய நறுக்கி எந்திர்த்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களது நேரத்தையும் கண்ணீரையும் மிச்சப்படுத்தும்.
9. உங்கள் குழந்தைகளின் ஓவியங்களில் சிறந்தவற்றை ஃபிரேம் செய்து வீட்டுச் சுவரில் மாட்டி வையுங்கள்.
10. புத்தகம் படிப்பதோ இல்லை வீட்டில் ஒரு பந்தை வைத்து விளையாடுவதோ இது போன்று உங்களுக்கு எது பிடிக்குமோ அதற்கு ஒரு நாளைக்கு 10 நிமிடம் ஒதுக்குங்கள்.
11. அனைத்து பிளாஸ்டிக் பைகளையும் மீண்டும் பயன்படுத்தவும். பயன்படுத்த முடியாதவற்றை பழைய பேப்பர் வாங்குகிறவர்களிடம் சேர்த்து வைத்துக் கொடுங்கள்.
12. தூங்க முடியவில்லையா? படுக்கைக்கு முன் லாவெண்டர் குளியல் எண்ணெயை தேய்த்து விட்டு கொஞ்சம் ஊற விடுங்கள்.
13. தேநீர் செய்முறையில் தேநீர்த் தூள் கொதிபட்ட ஒரு நிமிடத்திற்கு பிறகு பாலைச் சேருங்கள்.
14. உங்கள் சொந்த நகைச்சுவைகளுக்கு வெட்கமின்றி நீங்களே சிரியுங்கள்.
15. சனிக்கிழமை காலை சில கிளாசிக்கல் இசையுடன் தொடங்குங்கள் - இது அமைதியான வார இறுதிக்கான துவக்கமாக அமைகிறது.
16. எதையும் கூர்ந்து கவனியுங்கள்.
17. செல்பேசியில் உள்ள செட்டிங்ஸ்-க்கு சென்று app-களுக்கான நேர வரம்புகளை தீர்மானியுங்கள். உங்களிடம் ஐஃபோன் இருந்தால் செல்பேசி திரை எவ்வளவு நேரம் இயங்கலாம் என்பதை செயல்படுத்த முடியும்.
18. எங்கெல்லாம் படிக்கட்டுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ஏறவும்.
19. அடுத்த ரயிலையோ, பேருந்தையோ தவறவிட எப்போதும் தயாராக இருங்கள். பிளான் பி இருந்தால் தவற விடுதலின் போது வரும் கோபத்தை தவிர்க்க முடியும்.
20. வாரத்திற்கு ஒரு முறை இறைச்சி சாப்பிடுங்கள். அதுவம் குறைவாக. முட்டை, சிறிய மீன் போன்றவை ரெட் மீட் என்படும் இறைச்சியில் வராது.
21. முரட்டுத்தனமான அந்நியர்களிடம் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள். ரத்தக் கொதிப்பு, நாடித்துடிப்பும் ஏறாது.
22. கேள்விகளைக் கேளுங்கள். பதில்களுக்கு காது கொடுங்கள்.
23. வாய்ப்பு கிடைக்கும் போது இயற்கையுடன் இணைந்திருங்கள். வெறுங்காலுடன் சில நிமிடங்கள் வெளியே நிற்கவும். அது கடும் வெயிலாகவோ கடும குளிர்ச்சியாகவோ இருந்தாலும் கூட.
24. உங்களூரில் இருக்கும் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து அதை பயன்படுத்துங்கள்.
25. உங்கள் தொலைபேசி இல்லாமல் ஒரு சிறு நடை சென்று வாருங்கள்.
26. உப்பு சேர்க்கப்பட்ட வெண்ணெய் சாப்பிடுங்கள். ( உப்பில்லாதவர்களுக்கு வாழ்க்கை மிகவும் குறுகியது)
27. கை, கால்கள், உடம்பை நீட்டி மடக்கும் Stretch பயிற்சியை செய்யுங்கள். அது மாலையில் கூட இருக்கலாம்.
28. நீங்கள் ஒன்றறை கி.மீட்டருக்கு குறைவாக போக வேண்டும் என்றால் நடந்தோ, சைக்கிளிலோ செல்லுங்கள். ஏறக்குறைய பாதி வாகனப் பயணங்கள் மூன்று கி.மீட்டர்களுக்கும் குறைவாகவே நடக்கின்றன. இருப்பினும் இவை நீண்ட பயணங்கள் விட அதிக மாசுபாட்டை உருவாக்குகின்றன. ஏனெனில் என்ஜின் இன்னும் போதுமான சூட்டைப் பெறுவதில்லை.
29. உங்கள் செல்பேசியை வேறு அறையில் வைக்கவும். உங்கள் படுக்கை அறையில் அலாரம் கடிகாரத்தை வைக்கவும்.
30. புதிய காலணிகளை வாங்குவதற்கு பதிலாக பழைய காலணிகளை பழுது பார்த்து பயன்படுத்துங்கள்.
31. உங்கள் செல்பேசியில் டவிட்டரை வைத்திருக்க வேண்டாம்.
32. நீங்கள் விரும்பும் ஆடையை பார்க்கிறீர்கள். அதை எப்போதும் அணிவீர்கள் என்பதில் உறுதியாக இருந்தால் மூன்று செட்டுகளை வாங்குங்கள்.
33. வெந்நீரில் குளிப்பதற்கு முன்பு 30 வினாடிகள் முதல் 2 நிமிடம் வரை பச்சை தண்ணீரில் குளிக்கவும். இது உங்களது உடல் மற்றும் மனநல ஆரோக்கியதிதற்கு நல்லது.
34. எல்லா குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் செய்திகளுக்கும் நன்றி தெரிவியுங்கள்.
35. ஒவ்வொரு நாளும் ஒரு கவிதையை படியுங்கள். படுக்கைக்கு அருகில் அத்தகைய கவிதை தொகுப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.
36. நடைப்பயிற்சியின் போது ஹெட்ஃபோன்களை எடுத்து விடுங்கள். அந்த நேரம் உங்களைச் சுற்றி இருக்கும் உலகின் குரலைக் கேட்க வேண்டும்.
37. பயன்படுத்தப்பட்ட பொருட்களை அதாவது செகண்ட்ஹேண்ட் பொருட்களை வாங்குங்கள்.
38. எந்தப் பொருட்களையும் நேரில் வாங்குங்கள். ஆன்லைனில் வேண்டாம்.
39. இந்த உலகில் எதுவும் உங்களைக் கோபப்படுத்துகிறதா, கவலை வேண்டாம். உங்களை வார்டு கவுன்சிலர் அல்லது எம்எல்ஏ அல்லதுஎம்பிக்கு கண்ணியமாக கடிதம் எழுதுங்கள். அவர்கள் நிச்சயம் படிப்பார்கள்.
40. இறுதியாக உங்களது அண்டை வீட்டாரை பார்க்கும் போது ஒரு ஹலோ சொல்லுங்கள்.
இந்த இனியவை நாற்பதையும் கடைபிடியுங்கள். வாழ்வில் மகிழ்ச்சியை மீட்டு வாருங்கள்.
ALSO READ : மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான வழிகள்....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment