வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை ஹேக்கர்கள் புது வழிமுறைகளை கொண்டு அபகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.வாட்ஸ்அப் செயலியில் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்களின் பல்வேகறு புதுப்புது யுக்திகளில் ஏமாறும் பொது மக்கள் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பறிகொடுக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வரிசையில் ஹேக்கர்கள் கையாளும் புது வழிமுறை பற்றி பாதுகாப்பு ஆய்வாளர்கள் விளக்கி உள்ளனர். அதன்படி ஒற்றை போன் கால் மூலம் ஹேக்கர்கள் வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை அபகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சைபர் அச்சறுத்துல்கள் பற்றி கணிப்புகளை வெளியிட்டு வரும் கிளவுட்செக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தான் வாட்ஸ்அப் செயலியில் வரும் புது அச்சுறுத்தல் பற்றி தெரிவித்து இருக்கிறார். அதன்படி ஹேக்கர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை எடுத்து பேசுவோர் 67 அல்லது 405 என துவங்கும் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, அவர்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி, ஹேக்கர்கள் வசம் சென்று விடும்.
முதலில் ஹேக்கரிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் அதன் பின் 67 அல்லது 405 என துவங்கும் பத்து இலக்க எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள ஹேக்கர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி விடும்.
ஹேக்கர் தரப்பில் பயனர்களுக்கு வழங்கப்படும் மொபைல் எண் ஏர்டெல் மற்றும் ஜியோ சேவையில் கால் பார்வேர்டிங் செய்வதற்கான எண் ஆகும். இன் மூலம் பயனர்களுக்கு வரும் அழைப்புகள் தாங்கள் வழங்கும் மற்றொரு மொபைல் எண்ணிற்கே வரும். வாட்ஸ்அப் சேவையை பதிவு செய்யும் போது, ஓ.டி.பி. ஆப்ஷன் கேட்கப்படும். உங்களின் போன் என்கேஜ்டில் இருந்தால் ஓ.டி.பி. ஹேக்கர்களின் மாற்று மொபைல் எண்ணிற்கே அனுப்பப்படும். இதன் மூலம் தான் ஹேக்கர்கள் பயனர் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பறித்துக் கொள்கின்றனர்.
பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் இதே போன்ற எண்களையே வைத்து இருப்பதால், இந்த வழிமுறை சர்வதேச அளவில் பயன்படுத்துவதற்கான ஆபத்து அதிகம் தான். இதுபோன்ற பாதிப்புகளில் சிக்காமல் இருக்க தெரியாத நம்பர்களில் இருந்து அழைப்புகளை ஏற்காமல் இருப்பதே நல்லது.
Comments
Post a Comment