நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நடனம் ஆடும்போது நிறம் மாறும் ஹூடி… ஆச்சரியப்படுத்தும் வீடியோ.........

 சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து குழப்பமும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், ஹூடியின் நிறம் எப்படி மாறுகிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.


இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் வீடியோக்களும் வைரல் ஆகும் காலம் இது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் வீடியோ சூறாவளி போல சுழன்று வருகின்றன. இந்த முறை ஹூடி என்கிற தொப்பியுடன் கூடிய டீ சர்ட் அணிந்து டான்ஸ் ஆடும்போது எப்படியோ மாயாஜாலமாக ஹூடியின் நிறத்தை மாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து குழப்பமும் ஆச்சரியும் அடைந்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், ஹூடியின் நிறம் எப்படி மாறுகிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.


இந்த வீடியோவைப் பார்த்து, ஹூடியின் நிறத்தில் எப்படி மாற்றம் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள்.


இந்த வீடியோவில், எடிட்டர் கிறிஸ்டியன் கெஸ்னியல் வேறு நிற ஹூடி அணிந்து ராப் பாடலுக்கு நடனமாடுகிறார். ஆனால், அவர் அணிந்திருக்கும் ஹூடியின் நிறம் ஊதா, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வேறுபடுகின்றன.

ஹூடியின் நிறம் மாறும் இந்த வீடியோவின் தொடக்கத்தில், கிறிஸ்டியன் முன்னால் பச்சை நிற ஹூடி அணிந்திருப்பதைக் காணலாம். நடனம் தொடங்கியவுடன், பச்சை நிற ஹூடி நீல நிறமாக மாறுவது போல் தெரிகிறது. ஆனால் வீடியோ முடிவடையும் போது ஹூடி மீண்டும் பச்சை நிறமாக மாறுவதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. நீங்களே பாருங்கள் வர்ண ஜாலத்தை.

கிறிஸ்டியன் கெஸ்னியல் ஹூடியின் நிறத்தை எப்படி மாற்றினார் என்பதை சமூக ஊடகப் பயனர்களுக்குச் சொல்லும் யூடியூப் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிறிஸ்டியன் கூறுகையில், “நான் சட்டையின் உண்மையான நிறமான பச்சை நிறத்தை தனிமைப்படுத்துவதற்காக நான் அதை வண்ணமயமாக்கினேன்.” என்று கூறுகிறார். அவர் சொல்வதைக் கேட்டு நீங்களும் இதுபோன்ற வீடியோவை உருவாக்க நீங்களும் முயற்சி செய்யுங்கள்.



ALSO READ : நீங்கள் பார்ப்பது முதலையா? தீவா? இந்த படம் உங்க ஆளுமை பற்றி என்ன சொல்லுது பாருங்க!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்