நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரூ.230 கோடிக்கு ஏலத்திற்கு போக தயாராக உள்ள உலகின் மிகப்பெரிய ஒயிட் டயமண்ட்!

 'தி ராக்' வைர கல் ஆனது முன் எப்போதும் இல்லாத அளவில், பெரும் தொகைக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மிகப்பெரிய ஒயிட் டயமண்ட் அடுத்த வாரம் ஜெனீவாவில் விற்பனைக்கு வர உள்ளது. இது கிறிஸ்டி விற்பனையின் (Sale by Christie) ஒரு பகுதியாகும் மற்றும் இதில் ஒவ்வொன்றும் 200 காரட்டுகளுக்கும் அதிகமான எடையுள்ள இரண்டு வைர கற்கள் உள்ளன.

'தி ராக்' ஆனது 228.31 காரட் "பேரிக்காய் வடிவிலான" ஒரு வைர கல் ஆகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு கோல்ஃப் பந்தின் அளவில் உள்ளது. மேலும் ஏலதாரரின் கூற்றுப்படி, இது 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை என்கிற மதிப்பில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டியின் ஜுவல்லரி டிபார்ட்மென்ட்டின் தலைவர் ஆன மேக்ஸ் ஃபாசெட், "பெரும்பாலும் இது போன்ற பெரிய வைர கற்கள் ஆனது, அதன் எடையைக் குறைப்பதற்காக சில வடிவங்களைத் தியாகம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இது முற்றிலும் சமச்சீரான ஒரு பேரிக்காய் வடிவில் உள்ளது மற்றும் ஏலத்தில் விற்கப்படும் அரிதான ரத்தினங்களில் ஒன்றாகும்" என்று ராய்ட்டர்ஸிடம் கூறி உள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் வெட்டப்பட்ட, "தி ராக்" வைர கல்லை அதன் முன்னாள் உரிமையாளர் கார்டியர், நெக்லஸாக அணிந்து இருந்தார். இந்த ஒயிட் டயமண்ட்டிற்கு முன்பாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வைரக் கல் ஆனது 163.41 காரட் ரத்தினமாகும். அது கடந்த 2017 ஆம் ஆண்டில் விற்கப்பட்டது. 'மேஜர் ப்ரொட்யூசர்' ஆன ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளாலும், தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாலும், விஐபி நிகழ்வுகள் திரும்பி உள்ளதாலும் வைர விலை உயர்ந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக 'தி ராக்' வைர கல் ஆனது முன் எப்போதும் இல்லாத அளவில், பெரும் தொகைக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்டி நிறுவனம் ஆனது, 205.07 காரட் யெல்லோ, குஷன் வடிவிலான "தி ரெட் கிராஸ் டயமண்ட்" என்கிற பெயரை கொண்ட வைர கல்லையும் விற்பனை செய்கிறது. இதற்கு ஏன் ரெட் க்ராஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றால், இந்த வைரத்தை விற்கும் ஏலத் தொகையில் "குறிப்பிடப்படாத" ஒரு பகுதி ஜெனிவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (ICRC) செல்லும் என்பதால் தான்.
குறிப்பிட்ட ரத்தினம் ஆனது முதன்முதலில் கிறிஸ்டியால் 1918ல் லண்டன் ஏலத்தில் விற்கப்பட்டது. நினைவூட்டும் வண்ணம், லண்டன் ஏலமானது, போர் முயற்சிகளுக்கு உதவ, குடியிருப்பாளர்கள் விலையுயர்ந்த வீட்டுப் பொருட்களை விற்ற ஒரு ஏலம் ஆகும். அந்த வருமானத்தில், 10,000 பவுண்டுகள் (அதாவது தற்போதைய மத்தின்படி 12,350 டாலர்கள்), பிரிட்டிஷ் செஞ்சிலுவை சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து பேசுகையில், இம்முறை நடக்கும் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு உதவும் என்று கூறி உள்ளார்.






Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்