பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டால் பதட்டம் வேண்டாம்! உடனடியாக மீட்டெடுப்பது எப்படி?
- Get link
- X
- Other Apps
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் அதனால் ஏற்படும் ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரிக்கவே செய்கின்றன. அந்த வகையில் பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன.
உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்து இருக்கிறார்கள் என்பதை அறிவது எப்படி?
FB அக்கவுண்டில் Settings and Privacy > Settings சென்று login from a device சென்று பார்த்தால் உங்களுக்கு தெரியாத டிவைஸிலிருந்து login செய்யப்பட்டிருந்தால் உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.
உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால் அதை மீட்டெடுப்பது எப்படி?
உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதைக் கண்டறிந்த பிறகு நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் பாஸ்வேர்டை மாற்றுவது தான்.
உங்கள் அக்கவுண்ட்டை ஹேக் செய்து விட்டால் நீங்கள் சப்போர்ட் பேஜ் மூலமாகவும் Facebook-ஐ தொடர்பு கொள்ளலாம். Password and Security பேஜ்ஜிற்கு சென்று Get Help என்பதை கிளிக் செய்யவும். பின் அதில் உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கவும்.
உங்கள் Facebook அக்கவுண்டிலிருந்து ஒரு ஹேக்கர் உங்களை logged out செய்திருந்தால், facebook.com/hacked என்பதற்கு செல்லவும். உங்கள் Facebook அக்கவுண்டுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
நீங்கள் பதிவு செய்த எண்ணுடன் நீங்கள் உள்ளிடும் மொபைல் நம்பர் மேட்ச்சானால் உங்கள் Facebook அக்கவுண்ட்டிற்கான அக்சஸஸை மீண்டும் பெற Facebook உதவும்.
ஆகவே பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் பதட்டப்படாமல் மேலே கூறப்பட்ட வழிகளை பின்பற்றலாம்.
ALSO READ : இந்த நாடுகளில் எல்லாம் வரி இல்லை தெரியுமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment