நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வைரலாகும் மேங்கோ மேகி ரெசிபி... இந்த வீடியோவை பார்த்தா உங்களுக்கே தெரியும்..!

 மேகி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவு. இன்ஸ்டண்டாக அதுவும் 2 நிமிடத்தில் ஒரு காரசாரமான சுவையான உணவை சாப்பிட வேண்டுமெனில் அது மேகியால் மட்டுமே சாத்தியம்.


மேகியில் பல வர்ஷன்களை பார்த்த ஃபுட்டிகளுக்கு இது சற்று ஆச்சரியமான விஷயம்தான். இப்படியெல்லாம் கூட சாப்பிடுவார்களா என்பதே இதை பார்க்கும் பலருடைய கேள்வி. அப்படித்தான் இந்த வீடியோவைப் பார்த்த பலருடைய கமெண்டுகளும் இருக்கின்றன.

மேகி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவு. இன்ஸ்டண்டாக ஒரு காரசாரமான சுவையான உணவை சாப்பிட வேண்டுமெனில் அது மேகியால் மட்டுமே சாத்தியம். 2 நிமிடத்தில் செய்யக் கூடிய இது பேச்சுலர்களுக்கு வரப்பிரசாதம். இப்போது சாட் கடைகளில் கூட மேகி மிகவும் ஃபேமசாக உள்ளது. இப்படி மேகிக்கான ஃபேன் பேஸ் என்பது உலகம் முழுவதும் உள்ளது.

மேகி விரும்பிகளுக்கு அதை காரசாரமாக சாப்பிடவே பிடிக்கும். அதை இனிப்பு சுவையில் ருசிக்க எத்தனை பேர் விரும்பக்கூடும் என்பது சந்தேகமே... அதனால்தான் இந்த மேங்கோ மேகியை பார்த்த பலரும் நெகடிவ் கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.


அதாவது அந்த வீடியோவில் மேகிக்கு தேவையான வெண்ணெய் மற்றும் அதன் மசாலாவை போடுவது வரை பிரச்சனையில்லை. ஆனால் மேகி துண்டுகளை போட்டுவிட்டு அதை வேக வைக்க தண்ணீருக்கு பதில் மேங்கோ ஜூஸ் ஊற்றுவதும், அந்த மேங்கோ ஜூஸிலேயே வேக வைத்துவிட்டு இறுதியாக பரிமாறும்போது அதன் மேல் மாம்பழ துண்டுகளை வெட்டி தூவி கொடுப்பதும்தான் வித்தியாசமான முயற்சியாக இருந்தது. இந்த சுவை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ பலரையும் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.



ALSO READ : பேய் திருமணம் : 3000 ஆண்டுகளாக சீனாவில் நடக்கும் வினோதமான வழக்கம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!