வாரத்திற்கு 25 மணிநேரம் அல்லது ஒரு நாளைக்கு நான்கைந்து மணிநேரம் வேலை என்பதெல்லாம் இந்திய மக்களாகிய நம் கற்பனைக்கு எட்டாதவை. ஆனால் உலகம் முழுவதும் அப்படி ஒரு நிலை வந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரீப், செவ்வாயன்று தனது முதல் முடிவு ஒன்றை அறிவித்தார். அதன்படி அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க அரசாங்க அலுவலகங்களுக்கு ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம் என்று ஆறு நாள் மொத்தம் வாரத்திற்கு 60 மணி நேர வேலை என அறிவித்தார்.
வாரத்திற்கு 60 மணிநேர வேலை நேரங்களுடன், பாகிஸ்தான் இப்போது உலகிலேயே அரசாங்க அலுவலகங்கள் அதிக நேரம் வேலை செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. உண்மையில், பாகிஸ்தான் இந்த விஷயத்தில் உலக போக்கிற்கு எதிராக செல்கிறது. ஏனெனில் குறுகிய வேலை நேரத்திற்கான தேவை அதிகரித்து வருவதோடு பல நாடுகளும் இதைப் பரிசோதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் சராசரி வேலை வாரம் 40 மணிநேரமாக இருக்கிறது. அதேநேரம் இது ஒருவர் பணிபுரியும் துறையைப் பொறுத்தது. பென் வேர்ல்ட் டேபிள் என்ற இணைய தளம் உலக நாடுகளின் வருமானம், தொழிலாளர்கள், வேலைநேரம் முதலான தரவுகுளை அப்டேட் செய்கிறது.
ஆசிய நாடுகளில் வேலை நேரம் அதிகம்
இந்த இணையதளத்தின்படி, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள கம்போடியா வாரத்திற்கு 47.6 மணி நேரம் சராசரி வேலை நேரத்தைக் கொண்டுள்ளது. கம்போடியாவைத் தொடர்ந்து மியான்மர் (47.1), வங்கதேசம் (46.5), சிங்கப்பூர் (44.8), மலேசியா (42.3) ஆகிய நாடுகள் உள்ளன.
இருப்பினும், டிசம்பர் 2021 இல் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா சராசரியாக 48 மணிநேர வேலை வாரத்தைக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வேலை நேரம் குறைவு
மறுபுறம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்பு நிறுவனமான OECD இன் தரவுகளின்படி, ஜெர்மனியில் வாராந்திர வேலை நேரம் 25.6. அதைத் தொடர்ந்து டென்மார்க் (25.9), இங்கிலாந்து (26.29), நார்வே (26.3) மற்றும் நெதர்லாந்து (26.9) உள்ளன.
இதனால்தான் என்னவோ டென்மார்க், நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகியவை மகிழ்ச்சிக் குறியீட்டில் உயர்ந்த இடத்தில் உள்ளன. குறிப்பிட்ட நாடு ஒன்றில் சராசரி வேலை நேரத்தை நிர்ணயிப்பது சவாலானதாக இருக்கலாம். ஏனெனில் வேலைக்கான தகுதி என்ன மற்றும் ஒரு தொழிலாளியாக கருதப்படுபவர் யார் என்பதில் நாட்டுக்கு நாடு பொருள் வேறுபடுகிறது.
தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் நடுத்தர வருமானம் மற்றும் வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக வருமானம் கொண்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலை நேரம் குறைவாக இருப்பது தெரிகிறது.
மிக நீண்ட வேலை நேரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆசிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தினாலும், மிகக் குறைந்த வேலை நேரத்துடன் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் இருப்பதில் ஆச்சரியமில்லை.
வாரத்தில் நான்கு நாள் வேலை நேரத்தை அறிமுகம் செய்த நாடுகள்
மறுபுறம், பல நாடுகள் நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளன அல்லது சோதனை செய்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் புத்தாண்டில் நான்கரை நாள் வேலை வாரத்தை துவங்கியது. மேலும் பெல்ஜியமும் அதே மாதிரி அறிவித்திருக்கிறது. ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து, ஸ்வீடன், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி மற்றும் ஜப்பானில் உள்ள சில நிறுவனங்களும் நான்கு நாள் வேலை வாரத்தை பரிசோதித்து வருகின்றன.
நீண்ட வேலை வாரம் கொண்ட முதல் பத்து நாடுகள்
(மணிநேரத்தில் - பென் வேர்ல்ட் டேபிள், 2019 தரவு)
Comments
Post a Comment