நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எதிரே இருப்பது என்னவென்று தெரிவித்து பார்வை மாற்றுத்திறனாளிக்கு உதவும் 'பி மை ஐஸ்' செயலி.....

 பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பி மை ஐஸ் ( BE MY EYES) என்ற செயலி பெரிதும் உதவி வருகிறது.


பார்வை சவால் உள்ளவர்கள் தங்களது செல்போனில் பி மை ஐஸ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, வீடியோ வசதியை திறக்க வேண்டும். இதன் பின்னர் அவர்கள் தங்களது கைகளிலோ அல்லது சட்டை பாக்கெட்டிலோ செல்போனை வைத்துவிட்டால் அந்த செயலி மூலம் எதிரே இருப்பது என்ன என்பது குறித்து அந்த ஆப் தகவல்களை அளிக்கும்.


இதன் மூலம் அந்த நபர் நேராக செல்லலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானித்து செல்லும் இடத்திற்கு சரியாக சென்றுவிடலாம். பால் அட்டைப்பெட்டியில் காலாவதி தேதியைப் படிப்பதில் இருந்து சட்டையின் நிறத்தை விவரிப்பது வரை இந்த் ஆப் பல உதவிகளை செய்யும்.


 2015 இல் Hans Jorgen Wiberg ஆல் உருவாக்கப்பட்ட Be My Eyes செயலி, சிறிய, அன்றாடப் பணிகளில் உதவி தேவைப்படும் பார்வை சவால் உடைய மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.



ALSO READ : உப்பு நிறந்த கடலில் சர்க்கரை குவியல்கள்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!