சாப்பிடும்போது டிவி பார்க்குறிங்களா?... இதை கவனிங்க...
- Get link
- X
- Other Apps
சாப்பிடும்போது டிவி பார்ப்பதால் ஏகப்பட்ட பாதிப்புகள் உருவாகின்றன.
மனிதனுக்கு உரிய அத்தியாவசியங்களிலேயே உணவு மிகவும் முக்கியமாகும். ஆனால் பலர் உணவு உண்ணும்போது அதற்குரிய மதிப்பை கொடுப்பதில்லை. உணவில் கவனம் செலுத்தி சாப்பிடாமல் டிவியையோ, மொபைலையோ பார்த்துக்கொண்டு சாப்பிடுகின்றனர். இதனால் பல பிரச்னைகள் உருவாகின்றன.
அப்படி சாப்பிடும்போது கண்களின் பார்வை முழுவதும் திரையின் மீது பதிந்திருப்பதால் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இருந்தால் சாப்பிடும் அளவு தெரியாது. இதனால் வழக்கத்தைவிட அதிகமாகவோ, குறைவாகவோ சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
முக்கியமாக நாம் அதிகம் சாப்பிடும்போது அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக மூளை சிக்னல் கொடுக்கும். ஆனால் நமது கவனம் முழுவதும் திரையில் இருந்தால் அந்த சிக்னலை நாம் உணர மறக்கலாம்.
அதேபோல் திரையில் கவனம் செலுத்தி சாப்பிடும்போது ஒழுங்காக மெல்லாமல் அப்படியே விழுங்குவதால் செரிமான பிரச்னை, வயிற்று உப்புச பிரச்னைக்கு வழிவகுக்கும்.
மேலும், டிவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டால் முழுமையாக சாப்பிட்ட திருப்தியும் கிடைக்காது. இதனால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பசி எடுக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
எப்படி சாப்பிட்டால் நல்லது?
எத்தகைய உணவுகளை உட்கொண்டாலும் நன்றாக மென்று சாப்பிடும் வழக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அந்த உணவு எத்தகைய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அதன் சுவை மற்றும் நறுமணத்தை நுகர்ந்து உணர வேண்டும்.
நீங்கள் வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டுவிட்டீர்கள் என்ற சிக்னல் கிடைக்க சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்ப உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடும்போது சிக்னல் கிடைப்பதற்கான போதிய மூளைக்கு கிடைக்கும்.
ALSO READ : இவருதாங்க உண்மையான ஸ்னேக் பாபு: பாம்பெல்லாம் இவருக்கு பஞ்சுமிட்டாய் மாதிரி, திகில் வைரல் வீடியோ
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment