தபால் பெட்டிகள் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
- Get link
- X
- Other Apps
பல மகிமைகள் இந்த தபால் பெட்டிக்கு உள்ளது. ஆனால், இதை பற்றி நாம் அறிந்திறாத சில சுவாரஸ்யமான தகவல்களும் உள்ளன.
தபால் பெட்டிகள் பல காலமாக தகவல் தொடர்புக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. ஆனால், இவை இப்போது நமக்கு மிகவும் காலாவதியான ஒன்றாக தோன்றலாம். மக்கள் தொலைதூரத்தில் உள்ள தனது உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் செய்திகளை பரிமாறி கொள்ள அப்போது இருந்த ஒரே சேவை தபால் சேவை தான்.
அந்த அளவிற்கு தபால் துறை என்பது மிக முக்கிய ஒன்றாக பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. அன்று மட்டுமில்லாமல், இன்றும் பல முக்கிய சேவைகளை தபால் நிலையம் வழங்கி வருகிறது.
எல்லா தபால் நிலையத்திலும் தபால் பெட்டிகள் தான் வாசலில் இருந்து கொண்டு நம்மை வரவேற்கும். தபால் நிலையம் இயங்குவதற்கு தபால் பெட்டிகள் மிகவும் அவசியம். ஏனெனில், எல்லா தபால்களும் இந்த பெட்டியில் தான் சேகரித்து வைக்கப்படும். இப்படி பல மகிமைகள் இந்த தபால் பெட்டிக்கு உள்ளது. ஆனால், இதை பற்றி நாம் அறிந்திறாத சில சுவாரஸ்யமான தகவல்களும் உள்ளன.
இன்றைய காலகட்டத்தில், இணையத்தின் வருகையால், மக்கள் வீடியோ கால்கள் மூலமாகவும், குறுஞ்செய்திகள் மூலமாகவும் சில நொடிகளில் தங்களின் தகவல்களை பரிமாறி கொள்ள முடிகிறது. எனவே, தற்போது போஸ்ட்பாக்ஸ் மூலம் கடிதம் அனுப்பிஅதை பெறுவதிலும், அதற்குப் பதில் அளிப்பதிலும் மக்கள் ஆர்வம் இழந்து விட்டனர். ஆனால், இந்த தபால் பெட்டிக்குள் நாம் நினைக்க முடியாத சில உண்மைகளும் உண்டு. இதை பற்றி ஃபெக்லெஸ் ஃபாக்ஸ் (feckless fox) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில் 3 தபால் பெட்டிகளின் புகைப்படம் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த பதிவு பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் "இன்று தான் தபால் பெட்டிகள் தரையில் இணைக்கப்படவில்லை என்பதை நான் கற்றுக்கொண்டேன்!" என்பதை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். பின்னர் இந்த படத்தை thearchbishopofbanterbury என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் பதிவு செய்துள்ளார்.
பொதுவாக நாம் எப்போதும் தரையில் மட்டுமே பொருத்தப்பட்டதாக நினைக்கும் தபால் பெட்டிகள், மிகவும் பெரியது மற்றும் தரையில் ஆழமாக நடப்படுகிறது. தரையில் செல்லும் பகுதி கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் மேற்பகுதி மட்டுமே சிவப்பு நிறத்தை பெற்று இருக்கும். கீழே இருக்கும் படத்தை பாருங்கள்..
இந்த பதிவை மில்லியன் கணக்கானோர் லைக் செய்துள்ளனர். மேலும் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துக்களை கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த அஞ்சல் பெட்டிகளின் புகைப்படமானது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்படும்போது கிளிக் செய்யப்பட்டதாகும். இந்த பதிவு குறித்து பலரும், "தங்களுக்கு இதற்கு முன்னர் இது பற்றி தெரியாது" என்றே குறிப்பிட்டுள்ளனர். இது உங்களுக்கும் புதிதான தகவலாக இருக்கும் என்று நம்புகிறோம்.
ALSO READ : உலகின் தனிமையான தபால் நிலையத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த துணிச்சலான பெண் - யார் இவர்?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment