நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கூகுள் டொமைனை வெறும் ரூ.216க்கு வாங்கிய வெப் டிசைனர்: குழப்பத்தில் நிறுவனம்

 டொமைன் சில மணிநேரங்களுக்கு வேலை செய்யவில்லை. தளம் மீண்டும் வந்தபோது, கூகுள் நிறுவனம் இனி இந்த டொமைனுக்கு சொந்தமில்லை என்ற செய்தியும் வந்தது.


இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ளவும் கூகுள் என்ஜின் பேருதவியாக இருக்கிறது. பணியிடங்கள், தொழில்நிறுவனங்கள், மருத்துவ குறிப்புக்கள், படிப்பு என அனைத்து பிரிவுகளிலும் கூகுள் பயன்பாடு அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில் கூகுள் வேலைசெய்யாமல் போனால் அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம். ஆனால் இந்த நிகழ்வு அர்ஜென்டினாவில் சிறிது நேரம் நடந்துள்ளது. டொமைன் சில மணிநேரங்களுக்கு வேலை செய்யவில்லை. தளம் மீண்டும் வந்தபோது, கூகுள் நிறுவனம் இனி இந்த டொமைனுக்கு சொந்தமில்லை என்ற செய்தியும் வந்தது.

இதையடுத்து, அர்ஜென்டினாவின் கூகுள் டொமைன் பெயர் ஒரு வெப் டிசைனரால் வாங்கப்பட்டது தெரியவந்தது. கடந்த வாரம் அந்நாட்டில் இரண்டு மணி நேரம் தளம் செயல்படவில்லை. பிறகு 30 வயதான வெப் டிசைனர் நிக்கோலாஸ் குரோனா என்பவர் இதனை வாங்கியதாக கூறப்பட்டது. குரோனா அந்த டொமைனின் ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு சாதாரண, சட்ட செயல்முறை மூலம் இதனை வாங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து அவர் பிபிசியிடம் கூறியதாவது, "கூகுள் என்னை வாங்க அனுமதிக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை," என்று கூறினார். அது எப்படி நடந்தது என்பதையும் அவர் விளக்கியுள்ளார். அவர், ஒரு வாடிக்கையாளருக்காக ஒரு வலைத்தளத்தை வடிவமைத்துக் கொண்டிருந்தார். அப்போது கூகுள் தளம் டவுன் ஆனதாக வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ் மூலம் தெரிந்துகொண்டார்.

இதுகுறித்து பேசிய அவர், "நான் எனது பிரவுசரில் www.google.com.ar ஐ உள்ளிட்டேன். ஆனால் தளம் செயல்படவில்லை. விசித்திரமான ஒன்று நடக்கிறது என்று நான்கருதினேன். இதையடுத்து நெட்வொர்க் தகவல் மையம் அர்ஜென்டினாவுக்கு (NIC) செல்ல முடிவு செய்தேன்" என்று கூறினார். இந்த NIC, .ar நாட்டின் குறியீடு களங்களை இயக்குவதற்கு பொறுப்பான அமைப்பு ஆகும். அதில் அவர் கூகுளை தேடியுள்ளார். அப்போது அர்ஜென்டினாவின் கூகுள் டொமைனை வாங்க அனுமதி கிடைத்தது. இருப்பினும் அது வேலை செய்யாது என்று நினைத்த அவர், முயற்சி செய்து பார்த்துள்ளார்.



அதில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றினார். பின்னர் கொள்முதல் விலைப்பட்டியலுடன் அவருக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதன்மூலம் அவர் டொமைனை £ 2.08 யூரோ டாலர்களுக்கு வாங்கினார். அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் $ 2.90 மற்றும் இந்தியா விலையில் ரூ.216 ஆகும். அவர் டொமைனை வாங்கிய பிறகு அந்த URL-ஐ டைப் செய்துள்ளார். அதில் அவரது தனிப்பட்ட தகவல்களைக் கண்டறிந்து, பின்னர் ட்விட்டரில் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் இதுகுறித்து பிபிசியிடம் கூகுள் அர்ஜென்டினா கூறியதாவது, "குறுகிய காலத்திற்கு, டொமைன் வேறொருவரால் கையகப்படுத்தப்பட்டது. டொமைனின் கட்டுப்பாட்டை மிக விரைவாக மீட்டெடுப்போம்" என்று கூறியது. மேலும் எங்களது டொமைன் ஏன் விற்பனைக்கு வைக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, வெப் டிசைனர் குரோனாவிடம் இருந்து டொமைன் பெயர் விரைவில் என்.ஐ.சியால் பறிக்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். ஆனால் அவரது 270 பெசோக்கள் (அதாவது ரூ.216 பணத்தை) என்.ஐ.சி அமைப்போ அல்லது கூகுள் நிறுவனமோ திருப்பித் தரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!