நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஷோயப் அக்தர் விடுத்த வேண்டுகோள்... இந்தியாவுக்காக திரண்ட பாகிஸ்தான் நெட்டிசன்கள்!

 பிரபல கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, கொரோனா இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவுவதற்காக, பாகிஸ்தான் நெட்டிசன்கள் பலரும் உறுதுணைக் கரம் நீட்டியுள்ளனர்.


இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புக்கு உதவ வேண்டும் என பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ட்விட்டர் மூலமாக தொடர்ச்சியான பதிவுகளை இட்டு, இந்தியாவுக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கில் இப்படி ட்வீட்கள் பதிவிடப்பட்டன.

மனிதத்தை காப்பாற்றும் வகையில் இந்த நிகழ்வுகளுக்கு பின் இந்தியா குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``கொரோனா அலையின் அபாயகரமான பாதிப்புக்கு எதிரான போரில் இந்திய மக்களுடன் துணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் இதர உலக நாடுகளை சேர்ந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். உலக அளவிலான இந்த சவாலை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக பாகிஸ்தான் நெட்டிசன்கள் இப்படி இந்தியாவுக்கு உதவக்கோரி கோரிக்கை வைத்ததற்கு பின்புலமாக இருந்தவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர். அவர்தான் முதலில், இந்தியாவின் நிலை குறித்து வீடியோ வெளியிட்டு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்க, அதன்பின்பு நெட்டிசன்களும் இந்திய நிலையை உணர்ந்து தொடர் அழுத்தங்களை இம்ரான் கானுக்கு ஏற்படுத்தினர்.

அக்தர் தனது யூடியூப் பக்கத்தில், ``இந்தியா உண்மையில் கொரோனாவை எதிர்த்து போராடுகிறது. உலகளாவிய ஆதரவு தேவை. அங்கு சுகாதார அமைப்பு நொறுங்கி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பது எந்த அரசாங்கத்தாலும் முடியாத ஒன்று. இந்தியாவுக்கு உதவ வேண்டும் என எனது அரசாங்கத்துக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்தியாவுக்கு நிறைய ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை இருக்கிறது. அனைவரும் இந்தியாவுக்கு உதவ நிதி திரட்டுங்கள். இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் இதுவரை ஒன்றாக இருக்கிறோம். இனியும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த சில அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், இந்தியாவுக்கு ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகின்றனர். அக்தரின் இந்த முயற்சிக்கு பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இன்று பேசிய ஷோயப் அக்தர், ``இதுபோன்ற சூழலில், ஜூன் மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடங்கக் கூடாது.
இதேபோல் ஐபிஎல் 2021-க்கு இது சரியான நேரம் அல்ல. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படும் மக்களுக்கு, ஐபிஎல் பணத்தை கொடுத்து உயிர்களை காப்பாற்ற வேண்டும். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதையெல்லாம் நான் மிகுந்த வேதனையுடனும் ஏமாற்றத்துடனும் சொல்கிறேன். மக்களின் வாழ்க்கை இப்போது மிக முக்கியமானது" என்று வேதனையாக கூறியிருக்கிறார்.


also read :

வாய் மூலம் ஆக்சிஜன் அளித்து கணவரை காப்பாற்ற போராடிய மனைவி: நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!