வாய் மூலம் ஆக்சிஜன் அளித்து கணவரை காப்பாற்ற போராடிய மனைவி: நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்
- Get link
- X
- Other Apps
ஆக்ராவில் கொரோனா பாதித்த கணவனை, வாய்வழியாக மூச்சுக்காற்றை ஊதி சுவாசிக்க செய்த மனைவியின் புகைப்படங்கள் காண்போர் நெஞ்சை பதறவைக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஆக்ராவை சேர்ந்த ஒரு பெண், கணவனின் வாயில் வாயை வைத்து சுவாசிக்க செய்து அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அந்த மனைவியின் முயற்சி வீணாய் போனது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் 7ஆம் பிரிவில் வசிப்பவர் ரேணு சிங்கால். இவரது கணவன் ரவி சிங்கால் (47) என்பவருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரேணு சிங்கால், ரவி சிங்காலை சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
ஆட்டோ மூலமாக மருத்துவமனைக்கு வந்த ரவி சிங்காலின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில், ரேணு அவருக்கு வாய் வழியாக ஆக்சிஜன் அளிக்க முயன்றார். ஆனாலும், ரவி மூச்சு விடமுடியாமல் உயிரிழந்தார். இதனால் கலக்கமடைந்த ரேணு அழுது கதறிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் காண்போரை கலங்க வைக்கிறது.also read : இந்தியாவுக்கு 'கூகுள், மைக்ரோசாப்ட்' உதவி
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment