நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசிகளும்.. பின்னணியும்..

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்‌சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக புழக்கத்தில் இருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவைகளின் செயல்திறன் பற்றி பார்ப்போம்!
கொரோனா வைரஸ் தொற்றுவில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை மக்கள் பெருமளவு செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்‌சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக புழக்கத்தில் இருக்கின்றன. இதுவரை சுமார் 12 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. தற்போது ரஷிய தடுப்பூசியான ஸ்புட்னிக் வி-ஐ பயன்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவைகளின் செயல்திறன் பற்றி பார்ப்போம்!

கோவிஷீல்டு: இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது. இது 70 முதல் 90 சதவீதம் செயல்திறன் கொண்டது. நான்கு வாரம் முதல் 6 வார கால இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட வேண்டும் என்று ஆரம்பத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது நான்கு முதல் 8 வார இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 60 முதல் 90 நாள் இடைவெளிக்குள் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். அதேவேளையில் அதற்கு பிறகும் காலதாமதம் செய்தால் பாதிப்பு ஏற்படக்கூடும். சிம்பன்ஸிகளிடமிருந்து எடுக்கப்பட்ட அடினோவைரசின் (பொதுவான குளிர்ச்சியை ஏற்படுத்தும் வைரஸ்) வீரியத்தை குறைத்து மனித உடலுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இது வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. உடல்வாகுவை பொறுத்து குமட்டல், லேசான காய்ச்சல், தலைவலி, குளிர், ஒவ்வாமை போன்றவை சிலருக்கு ஏற்படக்கூடும்.

கோவாக்சின்: இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி 81 சதவீதம் செயல்திறன் கொண்டது. முதல் தடுப்பூசி போட்ட பிறகு 28 நாட்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி செயலிழக்கப்பட்ட, இறந்த கொரோனா வைரஸை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியும் கோவிஷீல்டு போன்றே பக்கவிளைவுகளை கொண்டிருக்கும்.

ஸ்புட்னிக் வி: இந்த தடுப்பூசியை ரஷியாவை சேர்ந்த கமலேயே இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது. இது 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டது. முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அடுத்த 21-வது நாளில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட வேண்டும். சார்ஸ்-கொரோனா-2 (கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) வைரசுடன் அடினோவைரஸ்கள் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தொடங்கும். பக்கவிளைவுகளை பற்றிய தகவல்கள் இல்லை.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!