தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் உண்ணக் கூடிய உணவில் ஜிங் என்று அறியப்படும் துத்தநாகம் இருக்க வேண்டும். ஜிங் இயற்கையாகவே பல உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. அந்த உணவுப் பொருட்கள் எவை என்பது குறித்து காணலாம் வாங்க.
துத்தநாகம் எனும் ஜிங் ஒரு அத்தியாவசியமான மினரலாகும். இது பல உணவுப் பொருட்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த ஜிங் மினரல் நமது நோயெதிர்ப்பு சக்தி, காயங்களை குணப்படுத்துதல் மற்றும் டிஎன்ஏ செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகுக்கிறது.
பெண்களுக்கு
இந்த தாது கர்ப்ப கால வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. நமது நுகரும் உணர்வு மற்றும் சுவையை பராமரிக்க தினமும் ஜிங் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இந்த சத்தானது பசியின்மைக்கு காரணமாகும் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. எனவே, ஆரோக்கியமாக இருக்க உங்கள் உணவில் துத்தநாகத்தை சேர்க்க வேண்டும். அந்த வகையில் ஜிங் கனிமம் அதிக அளவில் நிறைந்துள்ள உணவு வகைகளை பற்றி பார்ப்போம் வாங்க.
விதைகள்
விதை வகைகளான ஆளி, பூசணி மற்றும் எள் போன்றவற்றில் துத்தநாக சத்து அதிக அளவில் உள்ளது. அதாவது தினசரி தேவையான ஜிங்கில் 13% 2 மில்லி கிராம் விதைகளில் உள்ளது. மேலும், இந்த விதைகளில் இரும்புச் சத்து, நார்ச் சத்து மற்றும் ஒமேகா -3 போன்ற கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ள. ஜிங்கில் உள்ள சத்தானது, அதிக அளவிலான கொழுப்புச் சக்தியை எதிர்த்துப் போராடவும், வளர்சிதை மாற்றத்தின் போது ஏற்படும் கதிரியக்க செயல்பாடுகளில் இருந்து உங்கள் செல்களை பாதுகாக்க உதவுகிறது. ஆளி, பூசணி விதைகளை உங்களுக்குப் பிடித்த சாலட்டுகள், சூப் மற்றும் யோகர்ட் ஆகியவற்றில் சேர்த்து உண்ணுவதன் மூலம் உடலில் உள்ள ஜிங் அளவினை பேணி காக்கலாம்.
முட்டை
குறைந்த அளவு கலோரி மற்றும் புரதம் நிறைந்த உணவு முட்டை தான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. மேலும், தினமும் முட்டையை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் தினசரி தேவைக்கு தேவையான 5 சதவீத துத்தநாகம் நமக்கு கிடைக்கிறது. முட்டையில் நமது உடலுக்கு தேவையான, அத்தியாவசியமான ஒன்பது அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. முட்டையில் காணப்படும் கொழுப்பு நல்ல கொழுப்பு என்பதால் உயர் அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதத்தை அதிகரிக்க உதவுகின்றன. இது இதய நோய் தொடர்பான அபாயத்தை குறைக்க உதவுகிறது.
ஓட்ஸ்
முழு தானிய உணவான ஓட்சில் அதிக அளவிலான ஜிங் உள்ளது நிருபிக்கப்பட்டுள்ளது. ஒரு கப் ஓட்சில் தினசரி தேவைக்கு போதுமான துத்தநாகம் 27 சதவீதம் (2.95 மிகி) கிடைக்கிறது. ஓட்ஸை காலை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் சுறுசுறுப்பும், ஒரு நாள் முழுமைக்கும் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மேலும், ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைக்கவும், உடல் எடையை பராமரிக்கவும், இரத்தச் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவி புரிகிறது.
டார்க் சாக்லேட்
அனைவராலும் விரும்பப்படும் டார்க் சாக்லேட்டில் தான் அதிக அளவிலான துத்தநாகம் நிறைந்துள்ளது. அதாவது 100 கிராம் டார்க் சாக்லேட்டில் 30 சதவீதம் ஜிங் காணப்படுகிறது. மேலும், டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளதால் கொழுப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. கொழுப்பின் அளவைக் குறைப்பதால் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளும் களையப்படுகிறது.
தயிர்
பாலில் இருந்து பெறப்படும் தயிரில் ஜிங், கால்சியம், வைட்டமின்கள் பி- 2 மற்றும் பி- 12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு கப் தயிரில் சுமார் 20-லிருந்து 22 சதவீத ஜிங் அடங்கியுள்ளது. மேலும், பாலை விட தயிர் எளிதில் ஜீரணம் ஆகிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தி, எலும்புகளில் வலிமை மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறவும் தயிரினை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். துத்தநாகம் நிறைந்த உணவுகளை பெண்கள் தவறாமல் உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய்த்தொற்று காரணிகளை தடுக்கவும் உதவுகிறது.
Comments
Post a Comment