நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

“ஊழியர்கள் ஆண்டுக்கு 4 முறை அலுவலகம் வந்தால் போதும்!” - ஆஸ்திரேலிய மென்பொருள் நிறுவனம்

 கொரோனா தொற்றின் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய சொல்லியது. குறிப்பாக மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த நிறுவனங்கள் Work From Home பாலிசியை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை தலைமையிடமாக கொண்டு வரும் மென்பொருள் நிறுவனமான Atlassian தங்கள் ஊழியர்கள் ஆண்டுக்கு நான்கு முறை அலுவலகம் வந்தால் போதும் என தெரிவித்துள்ளது. 


“டீம் Anywhere என்ற கொள்கையின் மூலம் இதனை செயல்படுத்த உள்ளோம். எங்களது நிறுவனம் சர்வதேச நிறுவனமாகும். அதனால் பணியாளர்களின் திறனானது உலகின் எந்த இடத்தில் அவர்கள் இருந்தாலும் வெளிப்படும் என்பதை திடமாக நம்புகிறோம். சிலிக்கான் வேலியில் இருந்து தான் இந்த பணிகளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என கருதுகிறோம். அதனால் உலகின் எந்தபகுதியில் இருந்தும் எங்கள் ஊழியர்கள் பணியாற்றலாம். ஆண்டுக்கு நான்கு முறை மட்டும் அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள எங்கள் அலுவலகத்திற்கு அவர்கள் வருகை தந்தால் போதும்” என சொல்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஃபர்குவார். 

இப்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் ‘நம்ம முதலாளி! தங்க முதலாளி!’ என முணுமுணுத்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!