நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க வேதாந்தா நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையே சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டது.


இதற்கிடையே வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தையும், அதில் இயற்றப்பட்ட தீர்மானத்தையும், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதையும், இந்த அனுமதி 4 மாதத்திற்கு தற்காலிகமாக வழங்குவதையும், ஆக்சிஜன் தயாரிப்பதை அரசு அமைத்துள்ள குழு கண்காணிக்கும் என்பதையும் குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘உபரியாக உள்ள ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்’ என்றார்.

மற்றொரு நீதிபதி ரவீந்திர பட், ‘இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது இல்லையா? என வினவியதுடன், ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறி்த்து மத்திய அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது’ என்றார்.

இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ‘ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை முதலில் தமிழகத்துக்கு அளிக்க வேண்டும். உபரியான ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்’ என்றார்.

மத்திய அரசின் சொலிசி்ட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘தமிழகத்துக்கும், வேதாந்தாவுக்கு இடையே உள்ள பிரச்சினை குறித்து கவலையில்லை. ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி பயன்படுத்தாமல் உள்ளது. அதை பயன்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் வேண்டுகோள். ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். பின்னர் அது மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்’ என்றார்.

வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை மட்டுமே தயாரிப்போம். தமிழக அரசு ஆலைக்கான மின்சாரத்தை வழங்க வேண்டும். தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் உள்ளூர் மக்களும், தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் இடம்பெறச் செய்துள்ளதை எதிர்க்கிறோம் என்றார்.

இதற்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெறலாம். உள்ளூர்வாசிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை பொறுத்தவரை அவர்கள் குழுவுடன் கலந்து ஆலோசிக்கலாம். குழு அரசு பொறுப்புகளுடன் இயங்க வேண்டும்’ என்றார்.

இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு உள்ளூர் அளவில் அதிருப்தி நிலவியது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டது. உள்ளூர் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படவில்லை என்பதை உணர்த்தவே குழுவில் அவர்களை இடம்பெறச் செய்தோம்’ என்றார்.

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு கூடம் குறித்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதி்ல் அளித்த வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, ‘ஆலையில் 200 டன் வரை ஆக்சிஜன் தயாரிக்க முடியும். யாருக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறதோ, அதன்படி மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ அளிக்க தயாராக உள்ளோம். ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்குவோம்’ என்றார்.

இந்த வழக்கில் 10-வது எதிர்மனுதாரரான ராஜா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கொலின் கன்சால்வேஸ், ‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதை வரவேற்கிறோம். மூடப்பட்டுள்ள ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் பலமுறை முயற்சி செய்தது. 250 பேரை அனுமதிக்கக்கூடாது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 6 முதல் 9 மாதங்கள் பிடிக்கும் என உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்றார்.

தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் உள்ளூர் மக்கள் இடம்பெறுவதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்த ஆட்சேபனைக்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாக மத்திய அரசு கருத்து தெரிவிக்க கூடாது. குழுவில் உள்ளூர் மக்கள் இடம்பெற வேண்டும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் போலீசாரும், அரசு நிர்வாகமும் மும்முரமாக இருக்கும்’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் தயாரிக்க வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை ஏற்று அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த 3 சுற்றுச்சூழல் நிபுணர்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேர்வு செய்ய வேண்டும். இவற்றில் இருவரை ஆலையால் பாதிக்கப்பட்ட நபர்கள் தேர்வு செய்து தமிழக அரசின் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழக அரசே இடம்பெற செய்ய வேண்டும்.

ஆக்சிஜன் தயாரிப்பை தொடங்கும்முன் பாதுகாப்பு அம்சங்களை ஆராய கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட அதிகாரம் அளிக்கப்படுகிறது. ஆக்சிஜன் தயாரிப்பு கூடத்துக்கு தேவையான திட்டம், பணியாளர்கள் குறித்த விவரங் களை குழுவிடம் வேதாந்தா நிறுவனம் அளிக்க வேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பு கூடத்தில் அனுமதிக்கப்பட வேண்டிய நபர்களி்ன் எண்ணிக்கையை குழு முடிவெடுக்கும்.

உள்ளூர் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான முயற்சிகளை மேற்கொள்ள கண்காணிப்பு குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!