நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இனிப்பான எறும்பும், ஆண்டெனா தொடர்பும்..!

எறும்புகள், பூமியில் மிக நீண்ட காலம் வாழும் பூச்சிகளில் ஒன்றாகும்.
10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வகையான எறும்புகள் உலகம் முழுவதும் வாழ்கின்றன.

எறும்புகள் உணர்வு கொம்புகளான ஆண்டெனாவை ஒன்றோடு ஒன்று தேய்த்துக் கொண்டு தொடர்பு கொள்கின்றன.

பிற எறும்புகள் தங்களை பின்பற்றுவதற்கு ஒருவித ரசாயனங்களை தடத்தில் விட்டு செல்கின்றன. மற்ற எறும்புகள் இந்த தடத்தை பின்பற்றியே வரிசையாக ஊர்ந்து செல்கின்றன.

சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள் வரை உயிர்வாழும். இங்கிலாந்து ஆய்வுப்படி கருப்பு பெண் எறும்பு பல ஆண்டுகள் வரை உயிர் வாழும் என அறியப்பட்டது.

எறும்புகளுக்கு காதுகள் கிடையாது, நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே உணருகின்றன.

தேனீக்களை போலவே எறும்பு கூட்டத்திற்கும் ஒரு ராணி எறும்பு உண்டு. அதுவே அதிகாரம் நிறைந்தது.

எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. ஒன்று அவைக்காகவும், மற்றொன்று ஏனைய எறும்புகளுக்காகவும் நிரப்பப்படுகிறது.

எறும்புகள் பல்வேறு அளவில் இருக்கின்றன. சில எறும்புகளை பூதக்கண்ணாடியினால் மட்டுமே பார்க்க முடியும். அதிகபட்சமாக 3 அங் குலம் அளவுடைய எறும்புகளும் இருக்கின்றன.

எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது! கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை காலனி என்பார்கள். 2002-ம் ஆண்டில், இத்தாலி-ஸ்பெயின் எல்லையில் பில்லியன் கணக்கான எறும்புகளைக்கொண்ட சுமார் 5800 கிலோ மீட்டர்கள் நீளமுடைய எறும்புகளின் காலனி கண்டறியப்பட்டது.

எறும்புகள் தமக்கு தேவையான உணவுகளை விவசாயம் செய்யக்கூடியன. மனிதர்களும் எறும்புகளும் மட்டும் தான் விவசாயம் செய்கின்றோம். ஆனால் மனிதன் விவசாயம் செய்வதற்கு முன்பே எறும்புகள் விவசாயம் செய்துள்ளன.

ஹனிபாட் எறும்புகள் மனிதர்கள் உண்ணக்கூடியவை. அவற்றின் சுவை மிகவும் இனிமையானவை.

எல்லா எறும்பு கூட்டத்திலும் ஒரு சிப்பாய் எறும்பு இருக்குமாம். இதன் தலை பகுதியில், அரண் போன்ற அமைப்பு இருக்கும். இதன் வேலை என்ன தெரியுமா...? தன் தலையை கொண்டு கூட்டிற்குள் நுழையும் எதிரிகளை தடுப்பதுதான்.

எறும்புகள் தனது எடையை விட அதிகமான எடையை தூக்க வல்லன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்