ஆரஞ்சி தோல் முழுவதும் வைட்டமின் பி 6, கால்சியம், புரோவிட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் ஆகிய நுண் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.
உலகளவில் பிரபலமானது ஆரஞ்சுப் பழம். குளிர்காலத்தில் மக்களுக்கு பிடித்த பழங்களுள் ஆரஞ்சும் ஒன்று. சிட்ரஸ் அமிலம் செறிந்துள்ள இந்த ஆரஞ்சுப் பழம், அதன் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக கொண்டாடப்படுகிறது. இருப்பினும், ஆரஞ்சுப் பழத்தின் தோல் அனைவராலும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆரஞ்சு தோல்களில் பல ஆரோக்கியமான சத்துகள் நமக்காக காத்திருக்கின்றன. நீங்கள் ஆரஞ்சுப் பழத் தோலின் நன்மைகளை அறிந்து, அதனை உட்கொள்ள வேண்டுமா என்று யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவைகளை இங்கே படிக்கலாம்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இருப்பினும், அதன் தோலில், வைட்டமின் சி, நார்ச்சத்துகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற தாவர சேர்மங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இது, இதய ஆரோக்கியத்திற்கும், செரிமான மண்டலம் நன்றாக வேலை செய்வதை ஊக்குவிக்கும். ஆரஞ்சு தோலில் உள்ள பாலிபினால்கள் உடல் பருமன், அல்சைமர் நோய் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்கலாம் என்ற மருத்துவ அடிப்படையிலான கருத்தும் நிலவுகிறது. கூடுதலாக, ஆரஞ்சி தோல் முழுவதும் வைட்டமின் பி 6, கால்சியம், புரோவிட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் ஆகிய நுண் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.
ஆரஞ்சுப் பழத் தோலை எப்படி சாப்பிடலாம்?
இதுவரையில், ஆரஞ்சுப் பழத் தோல் உணவுப் பொருளாக பார்க்கப்படவில்லை. எனவே, ஆரஞ்சுப் பழத்தோலை உங்கள் உடலுக்கு பழகுவதற்கான நேரத்தை வழங்குங்கள். நீங்கள் ஆரஞ்சு தோலை கடித்து சாப்பிடலாம். வயிற்று பிரச்சினைகளைத் தடுக்க, சிறிய துகள்களாக எடுத்துக் கொள்ளுங்கள். மாற்றாக, மெல்லிய கீற்றுகளாகவும் வெட்டி சாப்பிடலாம். இதற்கு, நீங்கள் ஒரு கத்தி அல்லது ஒரு பீலரைப் பயன்படுத்தலாம், எனவே அவை சாலட்டிலும் சேர்த்து சாப்பிடலாம். தயிர் மற்றும் கேக்குகளிலும் ஆரஞ்சு தோலினை சேர்க்கலாம். ஆனால், தோலை சாப்பிடுவதற்கு முன், முதலில் பழத்தை நன்கு கழுவ நினைவில் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு தோலை சாப்பிடுவதற்கு முன் சில விசயங்களை நினைவில் கொள்வது இன்றியமையாதது. ஆரஞ்சு தோல் வெளிப்புற உறை என்பதால் அறுவடையின் போது தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருக்கலாம். இதற்கு, முன்பு குறிப்பிட்டபடி, நீங்கள் பழத்தை கழுவுவதன் மூலம் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மேலும், அதன் சிக்கலான அமைப்பு மற்றும் அதிக நார் சத்து உள்ளடக்கம் ஆகிய காரணங்களால் தோலை விழுங்குவது கடினமாகவும் இருக்கலாம்.
ஆரஞ்சு பழத் தோல், ஒரு விரும்பத்தகாத சுவை என சாப்பிட்டவர்கள் கூறுகிறார்கள். இது சிலருக்கு விரக்தியைத் தரலாம். உங்கள் உணவில் ஆரஞ்சு தோலை வழக்கமானதாக மாற்றுவதற்கு முன்பு, உங்கள் மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணருடன் கலந்தாலோசிப்பது அவசியமாகிறது.
Comments
Post a Comment