பைஸர், அஸ்ட்ராஜெனிகா ஆகிய கரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கொரோனா வாக்சின் அல்லது தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் மூலம் அடுத்தடுத்து தொற்றுப் பரவுவது குறைந்துள்ளதாக பிரிட்டன் சுகாதார அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆறுதல் தகவல் வெளியாகியுள்ளது.
பைஸர், அஸ்ட்ராஜெனிகா ஆகிய கொரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களால் பிறருக்கு கரோனா பரவுவது 50%க்கும் மேலாகத் தடுக்கப்படுகிறது. இது நல்ல அறிகுறி. இந்த மருத்துவப் பரிசோதனையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உட்படுத்தப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பும் மரண விகிதமும் உச்சம்:
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கொரோனாவில் 3645 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,04,832 ஆக அதிகரித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 28,44,71,979 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 17,68,190 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. கரோனா தடுப்பு மருந்தை பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே செவ்வாயன்று, பாரத் பயோ டெக் மற்றும் இந்திய வைராலஜி கழகமும் சேர்ந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவாக்சின் கொரோனா வைரஸின் சுமார் 617 வேரியண்ட் அதாவது வகைமாதிரிகளை வீரியமிழக்கச் செய்யவல்லது என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் டாக்டர் ஃபாஸி தெரிவித்துள்ளார்.
எனவே இந்தியாவின் உண்மையான கஷ்டங்களை பார்க்கும் போதும் தடுபூசி போட்டுக்கொள்வதுதான் முக்கியமாக கொரோனாவுக்கு எதிரான ஒரே வழிமுறை என்பதும் தெரியவருகிறது, என்கிறார் டாக்டர் ஃபாஸி.
Comments
Post a Comment