நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயம்; குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில் குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள லோகன் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 4 x 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடந்தன.

அப்போது பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய போது பார்வையாளர் பகுதியிலிருந்து உரிமையாளரின் பிடியிலிருந்து தப்பித்து ஹோலி என்ற நாய் ஒன்று பந்தய டிராக்கில் ஓடியது.

பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு நடுவே அந்த நாயும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இதனைக் கண்ட பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

எல்லைக் கோட்டுக்கு அருகே வந்த போது மாணவி லானேயை விட ஹோலி ஒரு வினாடி முந்திச் சென்றது. அந்த நாய் வெற்றி பெற்றதாக விளையாட்டாக அறிவிக்கப்பட்டது.

முதல் பரிசு பெற்ற மாணவி லானே கூறும் போது

"முதலில், இது மற்றொரு ஓட்டப்பந்தய வீரர் என்று நான் நினைத்தேன், எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால் நான் நீண்ட தூரம் முன்னிலையில் இருந்தேன் 

"அது நெருங்க நெருங்க, 'இது ஒரு நபராக இருப்பதற்கு சாத்தியம் இல்லைஎனவும் அது மிகச் சிறியது' என்று நினைத்தேன், பின்னர் அது ஒரு நாய் என்பதை நான் கவனித்தேன்," நான் அதனை எப்படி முந்தமுடியும் என நினைத்தேன் பின்னர் ஒருவாறாக சமாளித்தேன் என கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!