கொரோனா வந்தால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்தால் கிட்னியை எடுத்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களிடத்தில் உள்ளது. எனவே கொரோனா நோய், சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு இயக்கம் தேவை என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
கொரோனா சிகிச்சை பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் உத்தரப் பிரதேசத்தின் சில கிராமங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர், கொரோனா வந்தால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்தால் கிட்னியை எடுத்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களிடத்தில் உள்ளது. எனவே கொரோனா நோய், சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு இயக்கம் தேவை என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
கிட்னி திருடி விடுவார்கள் என்ற அச்சத்தினால் கொரோனா பரிசோதனைகளைக் கூட சில கிராம மக்கள் தவிர்த்து வருவதாக முன்னணி ஆங்கில ஊடகம் அங்கு நேரில் சென்று சேகரித்த விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதாப்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் இந்தர்பால் பாசி என்பவர் இந்த கிராமத்தில் ஒவ்வொரு 2வது வீட்டிலும் காய்ச்சல் வருகிறது, காய்ச்சலினால் இறக்கின்றனர் என்றார். ஆனால் தானோ தன் உறவினர்களோ கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் மேலும், அவர் கூறியதுதான் அறியாமையின் பரிதாபம், ‘மருத்துவமனையில் கொரோனா ஊசி போடுகின்றனர். அதனால்தான் பலரும் இறக்கின்றனர்’ என்கிறார்.
இவரும் இவரது நண்பர்கள், உறவினர்கள் மட்டுமல்ல கிராமத்தில் பலரும் மருத்துவமனைக்குச் சென்றால் இறந்து விடுவோம் என்று அச்சப்படுகின்றனர்.மேலும் மருத்துவமனையில் அறையில் தாங்களை தனியாக அடைத்து விடுவார்கள் உதவிக்கு யாரும் இருக்க மாட்டார்கள் போன்ற அச்சமும் நிலவுகிறது.
மேலும் சில கிராமங்களில் வீட்டிலேயே செத்தாலும் பரவாயில்லை மருத்துவமனை வேண்டாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர். இதைவிடவும் கொரோனா என்று அனுமதிக்கப்பட்டா மருத்துவமனைகளில் கிட்னியை திருடி விடுவார்கள் என்ற அச்சம் நிலவி வருகிறது.
உ.பி.யின் எம்.எஸ்.எம்.இ. அமைச்சர் சிதார்த் நாத் சிங், அரசு இத்தகைய சூழ்நிலையை கையாண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சமூக நல ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்கிறார்.
பதேபூர் மாவட்டத்தின் காக்ரேரு கிராமத்தில் உள்ள சத்திலால் என்பவர், “எங்கள் கிராமத்தில் நிறைய பேர் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலுடன் உள்ளனர். ஆனால் யாரும் சோதனை எடுத்துக் கொள்ளவில்லை” என்கிறார்.
மேலும், மருத்துவமனையில் இறந்தால் சொந்தக்காரர்களிடம் உடலை ஒப்படைக்க மாட்டார்கள் என்றும் கடைசி சடங்குகளைக் கூட செய்ய ஆளில்லாமல் போய் விடும் என்று மருத்துவமனைக்கு வருவதில்லை சிலர் என்கிறார் அதே சத்திலால். கொரோனா ரிசல்ட் பாசிட்டிவ் என்றால் நம் கிட்னியை திருடி விடுவார்கள் என்ற அச்சம் பிரதானமாக நிலவி வருகிறது.
“இத்தகைய வேதனையான வதந்திகள் கிராமங்களில் பரவி வருகிறது. கொரோனா பாசிட்டிவ் என்றால் தனிமைப்படுத்தி கிட்னியைத் திருடி விடுவார்கள் என்ற வதந்தி இவர்களிடம் பரவி வருகிறது” என்கிறார் அரசு உயரதிகாரி ஒருவர்.
“மருத்துவமனைகளில் நிறைய பேர் இறக்கின்றனர். கிராமத்தினரிடையே நிறைய அச்சம் நிலவுகிறது. ஆனால் அதிகாரிகளோ, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோ எட்டிக்கூட பார்ப்பதில்லை. இந்த நெருக்கடியில் எங்களுடன் அவர்கள் உடன் நிற்க வேண்டாமா?” என்கிறார் கிராமத் தலைவர் ஒருவர்.
Comments
Post a Comment