நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

COVID 19 பெருந்தொற்று காலத்தில் மக்கள் வசிக்க பாதுகாப்பான best நாடு இதுதான்!!

 கொரோனா தொற்றின் போது மக்கள் வசிக்கும் வகையில் எந்த அளவுக்கு ஒரு நாடு பாதுகாப்பானதாக இருந்துள்ளது என்பதன் அடிப்படையில், நாடுகளின் தர வரிசை பட்டியலை உருவாக்க, சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ப்ளூம்பெர்க்கின் கோவிட் ரெசிலியன்ஸ் தரவரிசை படி, சிங்கப்பூர் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றது. சில நாடுகளில் மெதுவாக இந்த தொற்றின் பிடி தளர்ந்து வரும் நிலையில், சில நாடுகளில் தொற்றின் இரண்டாவது மூன்றாவது அலைகள் மக்களுக்கிடையே பீதியை கிளப்பி வருகின்றன.

இந்த நிலையில், 'கொரோனா தொற்றே (Coronavirus) இல்லாத ஒரு இடம் உண்டா? இந்த அச்சம் இல்லாமல் வாழ ஒரு இடம் கிடைக்குமா?' என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருக்கும். உங்களுக்குள்ளும் அப்படிப்பட்ட கேள்வி இருந்தால், அதற்கான விடை இதோ உள்ளது. COVID-19 தொற்றுநோய் காலத்தில் பூமியில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்!!

கொரோனா தொற்றின் போது மக்கள் வசிக்கும் வகையில் எந்த அளவுக்கு ஒரு நாடு பாதுகாப்பானதாக இருந்துள்ளது என்பதன் அடிப்படையில், நாடுகளின் தர வரிசை பட்டியலை உருவாக்க, சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ப்ளூம்பெர்க்கின் கோவிட் ரெசிலியன்ஸ் தரவரிசை படி, சிங்கப்பூர் நியூசிலாந்தை (New Zealand) வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.


"வைரசை வீழ்த்துவதிலும், தடுப்பூசி செயல்முறையை வேகமாக செயல்படுத்துவதிலும் ஆசியாவில் மிக வேகமாக செயல்பட்ட சிங்கப்பூர் இந்த மாதத்திற்கான ப்ளூம்பெர்க்கின் கோவிட் ரெசிலியன்ஸ் தரவரிசையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. முதன் முறையாக சிங்கப்பூர் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது. தொற்றுநோய் காலத்தில் மக்கள் வசிக்கக்கூடிய மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான இடங்களின் பட்டியலை இந்த அமைப்பு கண்டறிந்து வெளியிடுகிறது." என்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை கூறியுள்ளது. 

சிங்கப்பூரில் (Singapore), நாட்டில் உள்நாட்டினர் மூலம் பரப்பப்படும் தொற்றின் அளவு பூஜ்ஜியத்திற்கு அருகில் உள்ளது. அங்கு நாட்டும் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு விட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் நல்ல முன்னெற்றத்தைக் கண்டு வரும் நாடுகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் கூட இன்னும் இந்த அளவு வெற்றியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் நாடுகளான சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவையால் தற்போது தங்கள் மக்களுக்கு தொற்றுநோய்க்கு முன்னர் இருந்தது போன்ற வாழ்க்கைத் தரத்தை அளிக்க முடிகிறது. தொற்று மீண்டும் பரவாமல் இருப்பதைத் தடுக்க, சர்வதேச பயணங்கள் மட்டும் அங்கு தவிர்க்கப்படுகின்றன" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தரவரிசையில் இடம்பெற்றுள்ள 53 நாடுகளில், இந்தியா 30 வது இடத்தில் உள்ளது. அர்ஜென்டினா, போலந்து மற்றும் பிரேசில் ஆகியவை தொற்றை சமாளிப்பதில் மிக மோசமாக செயல்படும் நாடுகளாக உள்ளன.


ALSO READ : இந்தியாவுக்கு உதவ கொரோனா நிவாரண நிதி திரட்டும் சிங்கப்பூரின் வர்த்தக அமைப்புகள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!