தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
ஒரே ஒரு டிவி ஷோவில் நடித்ததன் மூலம் ரூ.185 கோடி ஈட்டிய சீன நடிகை! விசாரணையை முடுக்கிய அரசு
- Get link
- X
- Other Apps
கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டுள்ள நிலையில் சினிமா தொழில் அதிகளவிலான இழப்பை சந்தித்து வருகிறது. வெள்ளித்திரை பிரபலங்கள் OTT, டிவி என சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் நிலையில் சீனாவை சேர்ந்த உச்ச நடிகை ஜெங் ஷுவாங் ஒரே ஒரு டிவி ஷோவில் நடித்ததன் மூலம் 185 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார்.
ஒரு ஆண்டு முழுவதும் பிஸியாக நடித்தால் தான் இந்த தொகையை ஹாலிவுட் சினிமாவில் அதிகம் வருமானம் ஈட்டும் நடிகர்கள் ஈட்ட முடியும். அதற்கு நிகரான வருமானத்தை வெறும் 77 நாட்களில் ஒரு டிவி ஷோவில் நடித்து ஈட்டியுள்ளார் ஜெங் ஷுவாங்.
இது தொடர்பாக அதிக வருமானம் மற்றும் வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக அவர் மீது விசாரணையை முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்கு தான் ஒத்துழைப்பதாகவும் Weibo போஸ்டில் பதிவு செய்துள்ளார் ஜெங் ஷுவாங்.
- Get link
- X
- Other Apps
Popular posts from this blog
Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!
ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ” க்ரேஸ் ” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. சோஃபியா_ரோபட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்...
கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!
தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால்...
கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...

Comments
Post a Comment