கொரோனா வைரசுக்கு நாசல் தடுப்பூசி (nasal vaccine) குறித்த சாத்தியக் கூறுகளை பாரத் பயோடெக் எம்.டி டாக்டர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
பிரபல ஊடகம் ஒன்றில் பேசிய பாரத் பயோடெக் எம்.டி டாக்டர் கிருஷ்ணா எலா, கொரோனா தடுப்பூசிகள் நுரையீரல் கீழ்ப்பகுதி மட்டுமே பாதுகாக்கின்றனர். நுரையீரலின் மேற்பகுதி மற்றும் மூக்கு பாதுகாக்கப்படுவதில்லை என கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம். ஆனால், அந்த தடுப்பூசி மூலம் தீவிர நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பதைத் தடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உங்களுக்கு 2-3 நாட்களுக்கு காய்ச்சல் வரக்கூடும் என்றும் ஆனால், இறப்பு குறையும் எனவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பேசிய அவர், கொரோனாவில் இருந்து மேலும் தற்காத்துக்கொள்ள ஒரு நாசல் தடுப்பூசி குறித்து விவரித்தார். அதாவது, நீங்கள் ஒரு நாசல் தடுப்பூசி எடுத்துக் கொண்டால், தொற்றுநோயைத் தடுக்கலாம். இதன் மூலம் வைரஸ் பரவல் ஒருவரிடம் இருந்து தடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
இது போலியோ போன்ற 4 சொட்டுகள். மூக்கில் ஒரு துளைகளில் 2 சொட்டுகள் என இரண்டு துளைகளில் 4 சொட்டுகள் இடப்படும். தற்போது, WHO போன்ற உலகளாவிய அதிகாரிகள் நாசல் பற்றி இரண்டாம் தலைமுறை தடுப்பூசியாக நம்புகிறார்கள். ஊசி போடும் தடுப்பூசிகள் வைரஸ் பரவுவதை நிறுத்தாது. எனவே, நாசல் தடுப்பூசிகளை நாம் உலகளவில் இணைக்க முடியும் எனவும் விளக்கமளித்தார்.
நாசல் தடுப்பூசிகளுக்கு முதல் கட்டம் சோதனை நடந்து வருகிறது. இதுகுறித்து அறிவிப்பு மே 8 தேதிக்கு முன்பு வெளிவரலாம். நாசல் தடுப்பூசி கொண்டு வந்த முதல் நபராக நாம் (பாரத் பயோடெக்) இருக்கும் என்றும் நாசல் தடுப்பூசி குறித்த ஆய்வுகளுக்காக காத்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். கட்டுப்பாட்டாளர்கள் உதவி செய்தால், அமெரிக்கா, சீனாவிலிருந்து எங்களுக்கு போட்டி இருந்தாலும் நாங்கள் இதில் முதன்மையாக இருப்போம் என உறுதியளித்தார்.
இதனிடையே, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ரூ.600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என விலை நிர்ணயம் செய்து அந்நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. இதற்குமுன்பு சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்தது அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment