நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பழைய புகைப்படங்களை அப்படியே புதிது போல மாற்றும் புதிய AI டெக்னாலஜி: ஐ.ஐ.டி மெட்ராஸ் குழுவின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ராஜ்கோபாலனின் பட செயலாக்கம் மற்றும் கணினி பார்வை ஆய்வகத்தில் இந்த சீரழிந்த படங்களை மீண்டும் உயிர்ப்பிக்க செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகளின் சக்தியைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஐ.ஐ.டி மெட்ராஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகளின் சக்தியைப் பயன்படுத்தி, வானிலை காரணமாக சேதமடைந்த சி.சி.டி.வி படங்களை அதன் அங்கீகாரம் தாண்டி அதனை மீட்டெடுக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். IEEE இதழில் வெளியான அறிக்கையின்படி, ஐ.ஐ.டி மெட்ராஸில் மின் பொறியியல் துறையின் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் ஏ.என். ராஜகோபாலன் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் மூளையாக செயல்பட்டுள்ளார். அவருக்கு, ஐ.ஐ.டி மெட்ராஸைச் சேர்ந்த மைத்ரேயா சுய்ன் மற்றும் குல்தீப் புரோஹித் ஆகியோர் உதவினர்.

மேற்கூறிய நிறுவனத்தில் ராஜ்கோபாலனின் பட செயலாக்கம் மற்றும் கணினி பார்வை ஆய்வகத்தில் இந்த சீரழிந்த படங்களை மீண்டும் உயிர்ப்பிக்க செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகளின் சக்தியைப் பயன்படுத்தியுள்ளனர். மழை-கோடுகள், மழைத்துளிகள், மூடுபனி மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட சி.சி.டி.வி படங்களை சுத்தம் செய்ய இந்த புதிய முறையைப் பயன்படுத்தலாம்.

சீரழிந்த பகுதிகளைப் பார்ப்பதும் படத்தை சுத்தப்படுத்துவதும் ஒரு நரம்பியல் நெட்ஒர்க்கிற்கு கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். எனவே பணிகளை இரண்டு வெவ்வேறு நிலைகளாக பிரிக்க முடிவு செய்தனர். முதன்மை கட்டத்தில், சீரழிந்த பகுதியை உள்ளூர்மயமாக்கும் நுட்பத்திற்கு ஒரு நரம்பியல் நெட்வொர்க்கை உட்படுத்தினர். இரண்டாவது கட்டத்தில், படத்தை மீட்டெடுக்க முதன்மை கட்டத்தில் இருந்து பெற்ற தகவலைப் நரம்பியல் நெட்ஒர்க் பயன்படுத்துகிறது. இது குறித்து மருத்துவர் ராஜகோபாலன் கூறியதாவது, “மழை மற்றும் பனி காரணமாக ஏற்படும் மோசமான வானிலையால் சி.சி.டி.வி புகைபடங்கள் அதன் தரத்தை கணிசமாக இழக்கின்றன" என்று கூறினார்.

சி.சி.டி.வி கேமரா லென்ஸ்களில் மழைத்துளிகள் இருப்பது ஒரு தொடர்புடைய பிரச்சினையாகும். இதனால் ஒருவரின் தெரிவுநிலையை பாதிப்பது மட்டுமல்லாமல், தன்னியக்க வாகனம் ஓட்டுதல், ட்ரோன் இமேஜிங் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றுக்கான கணினி பார்வை அமைப்புகளின் செயல்திறனை மோசமாக பாதிக்கும். பனிமூட்டம், துளி அளவுகள் மற்றும் மழைத்துளிகளில் அவற்றின் இருப்பிடங்கள் மற்றும் மழைக் கோடுகள் மற்றும் இருப்பிடங்களில் ஒரே மாதிரியான ஆழம் வேறுபாடுகள் காரணமாக இந்த சீரழிவுகள் அதிக இட மாறுபாட்டைக் கொண்டுள்ளன. நரம்பியல் நெட்வொர்க்குகளைப் பொறுத்தவரை, குழு தங்கள் மாதிரியைச் சோதிக்க பொதுவில் கிடைக்கக்கூடிய மழைக் கோடுகள், மூடுபனி, மழைத்துளி மற்றும் பிற தரவுத்தொகுப்புகளைப் பயன்படுத்தியது.

சிதைந்த இடங்களின் முன்கணிப்புடன் படத்தை மீட்டெடுப்பதற்காக knowledge distillation-ஐ அவர்கள் பயன்படுத்தினர். இது ஏற்கனவே இருக்கும் போட்டி முறைகளை விஞ்சுவதற்கு கணினியை அனுமதித்தது. இது குறித்து ராஜகோபாலன் மேலும் கூறுகையில், “மறுசீரமைப்பு செயல்முறைக்கு வழிகாட்ட, சீரழிவு முகமூடி கணிப்பின் ஆக்சிலரி டாஸ்க்கை பயன்படுத்துவதே எங்கள் முன்மாதிரி. இந்த ஆக்சிலரி டாஸ்க்கை தீர்ப்பது நெட்ஒர்க் அடுக்குகளில் முக்கியமான உள்ளூர்மயமாக்கல் திறனை செலுத்துகிறது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.

கவனமுள்ள knowledge distillation-ஐ பயன்படுத்தி இந்த திறனை பிரதான மறுசீரமைப்பு நெட்வொர்க்கிற்கு மாற்றுவோம். மேலும் இந்த கூடுதல் அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் சீரழிந்த பகுதிகளின் சுத்திகரிப்புக்கு கவனம் செலுத்துகிறோம். ” என்று கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பம் சீரழிந்த சி.சி.டி.வி படங்களை மீட்டெடுப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தாலும், மோசமான நிலைமையில் உள்ள கடந்த கால புகைப்படங்களை மீட்டமைக்க இவற்றை பயன்படுத்த முடியுமா என்பதைப் சோதித்து பார்த்ததில் மிகவும் அருமையான முடிவுகள் கிடைத்தன.எனவே பழைய நினைவுகளைப் புதுப்பிக்க இந்த தொழில்நுட்பம் உங்களுக்கு உதவக்கூடும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்