நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீனாவில் சர்வ சாதாரணமாக ரயிலில் பயணம் செய்யும் கால்நடைகள்-வைரலாகும் வீடியோ!

 சீனாவில் ரயிலில் கால்நடைகள் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சீனாவில் மக்கள் பயணிக்கும் பயணிகள் ரயிலில் ஒரு அசாதாரண காட்சி காணப்பட்டது. பயணிகள் ரயிலில் கால்நடைகள் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தான் அது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக ஊடங்கங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தெற்கு சீனாவின் சிச்சுவான் (Sichuan ) மாகாணத்தில் ஒரு ரயில் மக்கள் பயணித்து கொண்டிருக்கும் ரயில் பெட்டிக்குள் சர்வசாதாரணமாக கால்நடைகள் வேகமாக ஏறி நடந்து செல்வதை காண முடிகிறது.

சவுத் சீனா மார்னிங் போஸ்ட்(South China Morning Post) பகிர்ந்த இந்த வீடியோவில், சீனாவின்  சிச்சுவான் மாகாணத்தின் பக்ஸியோங்கில் (Puxiong) இருந்து பன்ஜிஹுவா(Panzhihua)- வுக்கு செல்வதற்காக செம்மறி ஆடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் குறிப்பிட்ட ரயிலில் முண்டியடித்து கொண்டு பெட்டிகளுக்குள் ஏறி வந்தன. ரயில் பெட்டியினுள் கால்நடைகள் ஏறியதும் வழியில் நின்று கொண்டிருக்கும் சில பயணிகள் பொறுமையாக அவற்றிற்கு வழிவிட்டனர். இதனால் கால்நடைகள் சீட்களுக்கு நடுவே இருக்கும் ரயிலின் இடைவெளியில் உலா வருவதை காணலாம். ஒரு சில பயணிகள் பேச்சு மற்றும் வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் இருந்ததால் தாங்கள் அமர்ந்திருக்கும் ரயில் பெட்டியினுள் கால்நடைகள் ஏறியுள்ளதை கவனிக்கவில்லை.

இந்த வினோத சம்பவம் பற்றிய வீடியோவை பகிர்ந்துள்ள சவுத் சீனா மார்னிங் போஸ்ட், இந்த காட்சிகள் ‘வறுமை ஒழிப்பு குறைந்த வேக ரயிலில்’  படம் பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த ரயில்  விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புற நகரங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கிறது.மேலும் ரயிலில் ஏறிய ஆடுகள் மற்றும் பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகள் உள்ளூர் விவசாயிகளால் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்று கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் "இந்த பயணிகள் தங்கள் இருக்கைகளைத் தேடுகிறார்களா? "என்று கால்நடைகளை குறிப்பிட்டுள்ளனர்.ஏறக்குறைய 1.19 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ கிளிப்பில், கால்நடைகள் ட்ரெயின் கார்ஸ் (train cars)வழியே நடந்து செல்வதைக் காணலாம்.

9 மணி நேரம் மற்றும் 353 கி.மீ நீடிக்கும் இந்த வறுமை ஒழிப்பு ரயில் பயணத்தில் விவசாயிகள் சிச்சுவான் மாகாணத்தை கடந்து செல்வதால், இந்த ரயிலிலும் ரயில் நிற்கும் இடங்களிலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்கலாம். குறைந்தபட்ச மலிவான ரயில் டிக்கெட்டுகளின் விலை 2 யுவான் (30 அமெரிக்க சென்ட்) மட்டுமே என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த அசாதாரண பயணிகள் ரயிலில் பயணிக்கும் வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடமிருந்து ஆயிரக்கணக்கான சுவாரஸ்யமான கமெண்ட்டுகளை பெற்று வருகிறது. ஒரு சில நெட்டிசன்கள் மனிதர்கள் ரயிலில் கால்நடைகளை ஏற்றுவது போல, கால்நடை ரயிலில் மனிதர்களை ஏற்றினால் என்ன ஆகும் என்று வேடிக்கையாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!