நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

12 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் கருவி- மதுரை பேராசிரியர் சாதனை

பேராசிரியர் ஆரோக்கியதாஸ் தலைமையிலான குழு, கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நானோ தொழில்நுட்பம் கொண்ட ஆக்சிஜன் முககவசத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.
  கொரோனாவை கண்டறியும் கருவி

அவனியாபுரம்:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது 2-வது அலையாக இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் வந்தாலும் பாதிப்புகள் அதிகரித்தே வருகின்றன. அதிலும் 2-வது அலை இந்தியாவில் மிக மோசமான முடிவுகளை தந்து வருகிறது.

கொரோனா பரிசோதனைக்கு ஆர்.டி.பி.சி.ஆர். உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டாலும் அவற்றால் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டு வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் 12 வினாடிகளில் கிடைக்கக் கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருவியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆரோக்கியதாஸ் தலைமையிலான குழு கண்டுபிடித்து பரிசோதனை செய்து வெற்றியும் பெற்றுள்ளது.

இதனை மதுரை மருத்துவக்கல்லூரி சேர்மன் நாகராஜன், டீன் சங்குமணி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் அடங்கிய குழு சோதனை செய்து சான்றிதழும் வழங்கி உள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பேராசிரியர் ஆரோக்கியதாஸ், பயோடெக்னாலஜி பேராசிரியர்கள் அசோக்குமார், வரலட்சுமி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணை வேந்தர் கிருஷ்ணன் ஆகியோர் பெயர்களில் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது, பல்கலைக் கழகம் என்பது ஏதோ படிப்பை கொடுத்து பட்டங்களை வழங்குவது மட்டுமில்லாமல் அந்தப் படிப்பை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

காமராஜர் பல்கலைக் கழகத்தில் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் சுற்றியுள்ள கிராமங்கள் வரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு கொண்டே இருக்கிறோம்.


தற்போது கண்டறியப்பட்டுள்ள நவீன முறை பரிசோதனைக்கு 50 முதல் 100 ரூபாய் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டியிருக்கும். எளிதாகவும், வேகமாகவும் இந்த பரிசோதனையை செய்ய முடியும்.

இயற்பியல் பேராசிரியரும், கண்டுபிடிப்பாளருமான ஆரோக்கியதாஸ் கூறும்போது, ஆர்.டி.பி. சி.ஆர். பரிசோதனையில் 75 சதவீத முடிவுகள் சரியாக வரக்கூடும். ஆனால் இந்த கண்டுபிடிப்பு மூலம் 99 சதவீத முடிவுகள் சரியாகவும், வெகு விரைவாகவும் நமக்கு கிடைக்கக் கூடும்.

மத்திய-மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் இதனை தயாரிப்பதற்கு முன்வரும்பட்சத்தில் இந்த பரிசோதனை மக்கள் பயன்பாட்டிற்கு வெகு விரைவாக வர கூடும் என்றார்.

பேராசிரியர் ஆரோக்கியதாஸ் தலைமையிலான குழு, கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நானோ தொழில்நுட்பம் கொண்ட ஆக்சிஜன் முககவசத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:-

நானோ தொழில் நுட்பம் கொண்ட முககவசம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நானோ தொழில் நுட்பம் மூலம் நாம் சுவாசிக்கும் கார்பன்டைஆக்சைடை வெளியேற்றி ஆக்சிஜன் கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு மூலம் நாம் இருக்கும் இடத்திலிருந்தே ஆக்சிஜன் உருவாக்கி நமக்கு தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சில தொழிநுட்பத்தை பயன் படுத்தி மனிதனின் சூழ்நிலைக்கு ஏற்ப ஆக்சிஜன் அளவு எவ்வளவு கிடைக்கும் என்பதை கணக்கிட்டு தரும்படியான தொழில்நுட்பத்தை இந்த கண்டுபிடிப்பில் சேர்த்துள்ளோம்.

இந்த கண்டுபிடிப்பு ஆஸ்துமா நோயாளிகள், சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் ஐ.சி.யு.வில் இருக்கும் நோயாளிகளுக்கு என பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்து விற்பனைக்கு வரும்போது சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய முககவசத்தின் விலை ரூ.500 ஆகவும் சென்சார் தொழில்நுட்பம் இல்லாமல் 20.9 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை ஆக்சிஜன் தரக்கூடிய முககவசம் ரூ.100 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் மலைப்பகுதிகளில் வேலை செய்யும் ராணுவ வீரர்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த கண்டுபிடிப்பு , முககவசம் அளவில் நிற்காமல் தீபாவளி சமயங்களில் துணிக்கடைகள் மற்றும் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள், விமானங்கள், ரெயில் பெட்டிகள் ஆகிய இடங்களில் பேனல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி இந்த தொழில்நுட்பத்தை தருவதன் மூலம் அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு ஆக்சிஜன் அளவு சரியான அளவில் கிடைப்பதற்கு இந்த தொழில்நுட்பம் உறுதுணையாக இருக்கும்.

இந்த முககவசம் தற்போது தயாராகி உள்ளது. முககவசம் தயாரிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அல்லது தனியார் நிறுவனங்கள் எதுவும் தயாராக இருந்தால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!