நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் vs ஆக்சிஜன் சிலிண்டர் - வித்தியாசம் என்ன?

 ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால், பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரானிக் டிவைசான ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரை அதிக அளவு மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.


நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோருக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால், மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை வாங்கி வீடுகளிலேயே உபயோகப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால், பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரானிக் டிவைசான ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரை அதிக அளவு மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்

பேட்டரி மூலம் இயங்கும் எலக்டிரானிக் மெடிக்கல் டிவைசான ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் கம்ப்யூட்டர் மானிட்டரை விட அளவில் கொஞ்சம் பெரியதாக இருக்கும். காற்றில் இருக்கும் ஆக்சிஜனை மறுசுழற்சி செய்து தூய ஆக்சிஜனாக கொடுக்கும். ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒருமுறை தீர்ந்துவிட்டால், அதனை மீண்டும் நிரப்ப வேண்டும். ஆனால், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களில் அந்த பிரச்சனை இல்லை. பேட்டரி இயக்கும் வரை சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றை சுத்திகரித்து ஆக்சிஜனைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். நோயாளிக்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் 99 விழுக்காட்டுக்கு மேல் தூய்மையாக இருக்க வேண்டும்.

ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் 94 முதல் 95 விழுக்காடு மட்டுமே தூய்மையான ஆக்சிஜனை வழங்கக்கூடியது என்றாலும், கொரோனா போன்ற கொடிய வைரஸ் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை இதன் மூலம் சரி செய்ய முடியும்.

உலக சுகாதார மையத்தின் அறிவிப்பின்படி, ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் வாரம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் செலுத்தும் விகிதத்தையும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மானிட்டரில் செட் செய்து கொள்ளலாம்.

ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரின் ஆக்சிஜன் தூய்மை போதுமானதா?

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும்போது கொடுக்கப்படும் ஆக்சிஜன் 99 விழுக்காடு அளவுக்கு தூய்மையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், 85 விழுக்காடு அல்லது அதற்கும் மேலாக ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பவர்கள் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஐ.சி.யூ வார்டு நோயாளிகளுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது எனவும் எச்சரித்துள்ளனர். ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் ஒரே நேரத்தில் இரண்டு நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும் என்றாலும், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.



ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் விரும்பப்படுவது ஏன்?

ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு மாற்றாக ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை மக்கள் அதிகம் விரும்புவதற்கு காரணம், சிலிண்டர்கள் ஒருமுறை தீர்ந்துவிட்டால் மீண்டும் அதனை மறுமுறை நிரப்ப வேண்டும். ஆனால், கான்சன்டிரேட்டர்களில் அந்தப் பிரச்சனை இல்லை. ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் நிமிடத்துக்கு 5 முதல் 10 லிட்டர் ஆக்சிஜனை மட்டுமே கொடுக்க முடியும். மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு நிமிடத்துக்கு 40 முதல் 50 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும். அந்த சமயங்களில் கான்சன்டிரேட்டர்களை பயன்படுத்த முடியாது. இதில் இருக்கும் ஆக்சிஜன்களை பாதுகாக்க சிறப்பு வெப்பநிலையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. மின்சாரம் மற்றும் சுற்றுப்புற காற்று இருந்தால் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களுக்கு போதும்.

ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் விலை

சிலிண்டர்களுடன் ஒப்பிடும்போது ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களின் விலை பன்மடங்கு அதிகம். ஒரு சிலிண்டரை சந்தையில் 8,000 முதல் 20,000 ரூபாய்க்குள் வாங்க முடியும். ஆனால், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் விலையானது 40,000 ரூபாய் முதல் ரூ. 90,000 வரை விற்பனையாகிறது. சிலிண்டர்களைப் போல் மறுமுறை நிரப்புதல் மற்றும் போக்குவரத்து செலவுகள் இல்லை என்றாலும் மின்சாரம், தொடர் பராமரிப்பு அவசியம்.

சந்தை நிலவரம்

சந்தை நிலவரப்படி ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்வதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், ஆண்டுக்கு 40,000 கான்சன்டிரேட்டர்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் இருந்து தற்போது மாதம் 30,000 முதல் 40,000 கான்சன்டிரேட்டர்கள் தேவை என்ற நிலை உருவாகியிருப்பதாகவும் கூறுகின்றனர்.



நாள்தோறும் 1,000 முதல் 2,000 கான்சன்டிரேட்டர் தேவை இருப்பதாகவும், ஆனால் தேவைக்கு தகுந்த உற்பத்தியாளர்கள் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், பெரும் அளவில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் இறக்குமதி மட்டுமே செய்யப்படுவதாகவும், பிலிப்ஸ், லாங்ஃபியன்( Longfian) போன்ற நிறுவனங்கள் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவிக்கிறனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!