உலகம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில் இன்றளவும் பல நாடுகளில் இருக்கும் காரணத்தால் பொழுதுபோக்கிற்காக அதிகளவில் யூடியூப் வீடியோ மற்றும் இதர இணையச் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் வாயிலாகக் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் மார்ச் காலாண்டில் மிகவும் சிறப்பான லாபத்தையும் வருமானத்தையும் பெற்று முதலீட்டாளர்களை மனம் குளிர வைத்துள்ளது.
இந்த அறிவிப்பால் ஆல்பாபெட் நிறுனவம் இன்று மிகப்பெரிய வரலாற்று மைல்கல்-ஐ அடைந்துள்ளது.
மார்ச் காலாண்டு முடிவில் ஆல்பாபெட் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் சுமார் 34 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் வருவாய் அளவு 55.3 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து, இது டிசம்பர் காலாண்டில் 56.9 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
17.9 பில்லியன் டாலர் லாபம்
இதேவேளையில் ஆல்பாபெட் நிறுவனத்தின் லாப அளவீடுகள் 17.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் ஒரு ஆல்பாபெட் பங்கிற்கு 26.29 டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் வருவாய், லாபம் என அனைத்து சந்தை கணிப்புகளையும் தாண்டி அதிகமான அளவை பதிவு செய்துள்ளது.
பிட்பிட் நிறுவன கைப்பற்றல்
மேலும் ஜனவரி மாதம் கூகுள் வெளியிடப்படாத தொகைக்குக் கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் நிறுவனமான பிட்பிட் நிறுவனத்தின் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைக் கூகுள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் கூகுள் தனது விளம்பர விற்பனையில் 32 சதவீத வளர்ச்சியையும், கிளவுட் சேவை விற்பனையில் 45.7 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. மேலும் அமெரிக்கா உட்பட உலகில் பல நிறுவனங்கள் தற்போது பல்வேறு கூகுள் சேவைகளைப் பயன்படுத்த துவங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம் உருவாக்கப்பட்டு முதல் முறையாக இந்த மார்ச் காலாண்டில் 30 சதவீதம் அளவீட்டில் வருவாய் பெற்றுள்ளது. இதேபோல் முதல் முறையாக ஒரு பங்கிற்கு 15.2 டாலர் லாபம் என்ற உயரிய அளவீட்டைத் தாண்டி முதல் முறையாக 26.29 டாலர் அளவை அடைந்து லாப அளவீட்டிலும் சாதனைப்படைத்துள்ளது.
லாக்டவுன் காரணமாகக் கூகுள் நிறுவனத்தின் வருவாய் மற்றும் வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருக்கும் நிலையில், 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பைபேக் திட்டத்தை ஆல்பாபெட் நிறுவனம் இக்காலாண்டு முடிவில் அறிவித்துள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தை
இந்த அறிவிப்பால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் கூகுள் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 4.3 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 2,390.10 டாலர் அளவீட்டை அடைந்து வரலாற்றில் முதல் முறையாக 1.6 டிரில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை அடைந்துள்ளது.
Comments
Post a Comment