நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இலங்கையில் அதிக சக்தி வாய்ந்த உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், அதன் பின்னர் உருமாறி வருவது அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை தொற்றுகள் கண்டறியப்பட்டன. இந்த வரிசையில் இலங்கையில் தற்போது புதிய திரிபு கண்டறியப்பட்டு இருக்கிறது. இது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்தது எனவும், வேகமாக பரவக்கூடியது என்றும் இலங்கை நோய் எதிர்ப்புத்துறை தலைவர் நீலிகா மாலவிகே தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பின் இந்த வைரஸ் அதிகமாக பரவுவதாகவும், இதற்கு அதிகமான இளைஞர்கள் சிக்கியிருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த வைரஸ் திரிபு இலங்கையில் 3-வது அலையை உருவாக்கக்கூடும் என சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது இலங்கை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்