நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எதற்கெல்லாம் நல்லது தெரியுமா துரியன் பழம்...!

எதற்கெல்லாம் நல்லது தெரியுமா துரியன் பழம்...!

𒈒 துரியன் பழம் அதிக மருத்துவத் தன்மை கொண்ட பழங்களுள் ஒன்று. இதன் மணம் ஒருவித வெறுக்கத்தக்க நாற்றத்தைக் கொண்டது. ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். மேலும் மருத்துவ குணங்கள் கொண்டது.போதிய அளவு துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். 
𒈒உடல் சத்து குறைவினாலும், மது, புகை போதை போன்ற தீய பழக்கங்களினாலும் உடல் வலுவிழந்து காணப்படும். இதற்கு இவர்கள் வாரம் இருமுறை துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
𒈒இரத்தத்தில் அதிக கொழுப்பு பொருட்கள் படிவதால் இரத்த அடைப்பு ஏற்பட்டு இரத்தம் அசுத்தமாகிறது. இந்த கொழுப்பு சத்தை கரைத்து கலோரிகளாக மாற்றி இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
𒈒ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
 𒈒மலச்சிக்கலை நீக்கும் குணம் துரியன் பழத்திற்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியைக் ஏற்படுத்தும். கண்களின் பார்வை நரம்புகள் பலப்படும். தோலை பாதுகாத்து சருமத்தை பளிச்சிட செய்யும்.
𒈒வாழைப்பழத்தை விட, 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குழந்தை இல்லாத தம்பதியர் தேடி சாப்பிடும் பழமாக துரியன் உள்ளது. குழந்தை பிறப்புக்கு இந்த பழம் காரணமாக உள்ளது என கருதப்படுவதால், சீசன் காலங்களில் இதற்கு பெரும் கிராக்கி உள்ளது. கிராக்கிக்கு ஏற்றாற்போல் இதன் விலையும் சீசன் காலங்களில் அதிகம்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்