நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Queen Elizabeth : எலிசபெத் ராணிக்கு வருடத்தில் 2 முறை பிறந்தநாள் கொண்டாடப்படுமாம் - ஏன் தெரியுமா?

 ண்டாடுவார். அன்றைய தினத்தில் ஹைட் பூங்காவில் 41-துப்பாக்கி குண்டுகள் முழக்கம், வின்ட்சர் கிரேட் பூங்காவில் 21-துப்பாக்கி குண்டுகள் முழக்கம் மற்றும் லண்டன் கோபுரத்திராணி வழக்கமாக தனது உண்மையான பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கொல் 62-துப்பாக்கி குண்டுகள் முழக்கத்துடன் அவருக்கு மரியாதையை செலுத்தப்படும்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த ஏப்ரல் 21ம் தேதி அன்று தனது 95வது வயதை எட்டினார். ஆனால் எலிசபெத் ராணியின் கணவர் மற்றும் டியூக் ஆப் எடின்பர்க் என்றழைக்கப்படும் இளவரசர் பிலிப் இறந்ததால் அவரது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்படவில்லை. கணவர் தன்னுடன் இல்லாத காரணத்தினால் அவரது பிறந்த நாள் நிழலாடியது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் கடந்த 9ம் தேதி காலமானார். இன்னும் சில மாதங்களில் இளவரசர் பிலிப்பின் 100வது பிறந்த நாளை கொண்டாட அரச குடும்பத்தினர் ஆயத்தமாக இருந்த நிலையில் தனது 99வது வயதிலேயே மறைந்துவிட்டார். இது அரச குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. மேலும், கடந்த சனிக்கிழமை அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. தேவாலயத்தில் நடந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் குடும்பத்தினர் என 30 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் தனது பிறந்தநாள் கடந்த ஏப்ரல் 21ம் தேதி வந்தது. பிறந்தநாளையொட்டி எலிசபெத் ராணிக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக எலிசபெத் ராணி ஒரு வருடத்தில் இரண்டு முறை பிறந்தநாளைக் கொண்டாடுவாராம்.

இவர் 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி பிறந்தார். இந்த நாளில் தான் அவர் தனது உண்மையான பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஆனால் அதே வருடம் அவருக்கு உத்தியோகபூர்வமாக மற்றொரு பிறந்த நாளும் வருகிறது. இது ஜூன் இரண்டாவது சனிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது..

ராணி வழக்கமாக தனது உண்மையான பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடுவார். அன்றைய தினத்தில் ஹைட் பூங்காவில் 41-துப்பாக்கி குண்டுகள் முழக்கம், வின்ட்சர் கிரேட் பூங்காவில் 21-துப்பாக்கி குண்டுகள் முழக்கம் மற்றும் லண்டன் கோபுரத்தில் 62-துப்பாக்கி குண்டுகள் முழக்கத்துடன் அவருக்கு மரியாதையை செலுத்தப்படும். இந்த ஆண்டு, எடின்பர்க் டியூக்கின் மறைவுக்கு ராயல் குடும்பத்தினர் இரங்கல் தெரிவித்து வருவதால், கொண்டாட்டங்களை குறிக்கும் வகையில் ஏப்ரல் 21ம் தேதி துப்பாக்கி குண்டு முழக்கங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

ராணி தனது அதிகாரப்பூர்வ உருவப்படத்தையும் வெளியிடவில்லை. அதேசமயம், அவரது உத்தியோகப்பூர்வ பிறந்தநாளில், நாட்டில் ஒரு பெரிய கொண்டாட்டமே நடக்கும். பாரம்பரிய விழாவான ட்ரூப்பிங் ஆஃப் கலர்ஸ் அணிவகுப்பு நடைபெறும். பிரிட்டிஷ் மன்னர்களின் உத்தியோகபூர்வ பிறந்தநாளைக் குறிக்கும் விழா கடந்த 260 ஆண்டுகளுக்கும் மேலாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அணிவகுப்பில் 1400 க்கும் மேற்பட்ட வீரர்கள், 200 குதிரைகள் மற்றும் 400 இசைக்கலைஞர்கள் பங்கேற்பர். அணிவகுப்பு ராணியின் உத்தியோகபூர்வ இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து தொடங்கி டவுனிங் தெருவுக்கு அருகிலுள்ள வைட்ஹாலில் வரை மால் மற்றும் குதிரை காவலர் அணிவகுப்பு நடத்தப்படும்.

பின்னர் அவர்கள் மீண்டும் அரண்மனைக்கே திரும்புவர். அரச குடும்பத்தினர் பாரம்பரிய விழாவின் ஒரு பகுதியாக மாலில் பயணம் செய்து, அவர்கள் வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து மக்களை காண்பார்கள். இந்த நிகழ்விற்காக வான்வழி காட்சியை RAF விமானங்கள் நிகழ்த்துவதன் மூலம் அணிவகுப்பு நிறைவடையும். ராயல் விதிமுறைகளின்படி, கோடை காலத்தில் வானிலை நன்றாக இருக்கும் ஒரு நாளில் ராயல் மோனார்க்கின் உத்தியோகபூர்வ பிறந்த நாளை கொண்டாடுவது அவசியம். அக்டோபரில் பிறந்த இரண்டாம் ஜார்ஜ் மன்னரால் இந்த வழக்கம் தொடங்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!