நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோவிட் 19 - மருத்துவமனை இடவசதி, ஆக்சிஜன் உதவி எளிதாக கிடைக்க சிறந்த வழி இதோ

ஏழை, ஏளிய மக்களின் நிலை மிகவும் கொடூரமாக உள்ளது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காததால் மருத்துவமனைகளுக்கு வெளியேவும், சாலைகளிலும் தஞ்சமடைந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் 2வது அலை இந்தியா முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் படுக்கை வசதி தட்டுப்பாடு பெருமளவு ஏற்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மருத்துவமனைகளில் இடம்பெற்றுத் தர முடியாத சூழல் நிலவுகிறது. ஏழை, ஏளிய மக்களின் நிலை மிகவும் கொடூரமாக உள்ளது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காததால் மருத்துவமனைகளுக்கு வெளியேவும், சாலைகளிலும் தஞ்சமடைந்து வருகின்றனர்.

அவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, சமூகவலைதளங்கள் மூலம் பெரும்பாலானோர் உதவிகளை பெற்று வருகின்றனர். டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் தங்களுக்கு வேண்டிய உதவிகளை பலர் கேட்கின்றனர். மருத்துவமனை படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுபாடு, பிளாஸ்மா தானம், ஆம்புலன்ஸ் வசதி போன்ற கோரிக்கைகளை பதிவிடும் நபர்களுக்கு, நெட்டிசன்கள், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களின் தொடர்பு எண்களை பெற்று தேவையான உதவிகளை செய்கின்றனர்.

கொரோனா போன்ற இந்த நெருக்கடியான காலத்தில் மக்களுக்கு உதவும் சாதனமாக சமூகவலைதளங்கள் இருப்பதால், அவற்றை எவ்வாறு பயன்படுத்தி உதவி கேட்பது என பலருக்கும் தெரியவில்லை. மருத்துவமனை படுக்கை வசதி, ஆக்சிஜன் சிலிண்டர் உதவி, யாரெல்லாம் எந்த நகரங்களில் உதவி செய்கிறார்கள், அதிகாரிகளை தொடர்பு கொள்வதற்கான உதவி எண்கள் என்பது போன்ற தகவல்களை டிவிட்டர் மூலம் எப்படி தெரிந்து கொள்வது என்பதை இங்கே காணலாம்.

மற்ற சமூகவலைதளங்களைக் காட்டிலும் டிவிட்டர் மூலம் விரைவாக உதவியை பெற முடிவதாக பலரும் கருதுகின்றனர். அந்தவகையில், நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அந்த இடத்தை டிவிட்டரில் Search Box-ல் டைப் செய்து தேடலாம். உதாரணமாக, டெல்லியில் இருக்கும் உங்களுக்கு கொரோனா வேக்சின் குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் "#COVIDSOS" என டைப் செய்து அருகில் டெல்லி என குறிப்பிட்டீர்கள் என்றால், அந்த ஹேஸ்டேக்கின் கீழ் இருக்கும் அனைத்து டிவிட்டுகளும் உங்களுக்கு காண்பிக்கப்படும்.

உங்களுக்கு என்ன தேவையோ, அது தொடர்பான ஹேஸ்டேக்குகளை தேர்தெடுத்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யலாம். ஹேஸ்டேக், வார்த்தை, சொற்றொடர் என உங்களுக்கு தெரிந்தவற்றை டிவிட்டர் Search Box-ல் டைப் செய்யும்போது, அது தொடர்பான கூடுதல் தகவல்கள் உங்களுக்கு உடனடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறதென்றால், Oxygen cylinder vendor என தேடுங்கள். அது தொடர்பான டிவிட்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பிட்ட நிறுவனம் பற்றிய தகவல் வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் பெயரை டைப் செய்து தேட வேண்டும். மும்பையில் மருத்துவமனை படுக்கை தேவைபடுகிறதென்றால், “Hospital beds” near:“Mumbai” என டைப் செய்ய வேண்டும்.

கொரோனா வேக்சின் முதல் மருத்துவமனைகளின் படுக்கை வசதி, எந்த ஊரில் என்ன நிலைமை, அரசு கொடுத்துள்ள அறிவிப்பு, முன்னெச்சரிக்கை பின்பற்றும் வழிமுறைகள் அனைத்தும் டிவிட்டரில் உள்ளது. சரியான வார்த்தைகளை தேர்தெடுத்து நீங்கள் தேடும்போது உங்களுக்கான பதில், உதவி அனைத்தும் கிடைக்கும். தேடுகிற பொருளை (தகவலை) சரியாக பதிவிட வேண்டும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!