கொரோனா வைரஸ் மிகவும் அச்சுறுத்தி வந்த அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 114 வயதான பெண்மணி, தற்போது அந்த நாட்டின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் வசிப்பவர்களில் மிகவும் வயதில் மூத்தவர் என்ற பெருமைக்கு 114 வயதான பெண்மணி தெல்மா சுட்கிளிஃப் (Thelma Sutcliffe ) சொந்தக்காரராகியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் மிகவும் அச்சுறுத்தி வந்த அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 114 வயதான பெண்மணி, தற்போது அந்த நாட்டின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். தெல்மா சுட்கிளிஃப் (Thelma Sutcliffe ) என்ற பெண்மணி அமெரிக்காவின் அதிக வயதான பெண்மணி என்பதுடன், உலகில் வாழும் 7வது அதிக வயது நபராகவும் இருக்கிறார்.
அமெரிக்காவின் நெபராஸ்கா (Nebraska) நகரில் உள்ள ஒமாகா பகுதியில் வசித்து வருகிறார். அங்குள்ள மூத்த குடிமக்கள் வசிக்கும் ஹோம் ஒன்றில் இருக்கும் அவருக்கு தற்போது 114 வயதாகிறது. வடக்கு கரோலினா பகுதியில் வசித்து வந்த ஹெஸ்டர் போர்டு என்ற பெண்மணி அந்நாட்டின் அதிக வயதான பெண் என்ற பெருமையுடன் இருந்தார். ஏப்ரல் 17 ஆம் தேதி அவர் இறந்ததால், அந்த பெருமை தெல்மாவுக்கு தற்போது கிடைத்துள்ளது. இந்த தகவலை ஜெரோனாட்டாலஜி ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. ஒமாகா ஹெரால்டு ரிப்போர்டின்படி சுட்கிளிஃப் அக்டோபர் 1 ஆம் தேதி 1906 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அவரை, நீண்ட கால தோழியான லூயெல்லா மேன்சன் கவனித்துக் கொள்கிறார். தெல்மாவின் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றவராகவும் மேன்சன் இருந்து வருகிறார்.
தெல்மா குறித்து பல விஷயங்களை மேன்சன் பகிர்ந்துள்ளார். அதில், தெல்மாவுக்கு தற்போது காது மற்றும் பார்வைக் குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவரின் சிந்தனை மற்றும் மனநிலை மிகவும் ஷார்ப்பாக இருப்பதாக கூறினார். தெல்மாவை யாரேனும் பார்க்க வருவதாக இருந்தால், 24 மணி நேரத்துக்கு முன்பே தெரிவித்துவிட வேண்டும் எனக் கூறிய அவர், பார்வையாளர்கள் வருவதற்கு முன்பு தன்னுடைய அறையில் உணவுகளை சாப்பிட்டுவிட்டு தயாராக இருப்பார் எனத் தெரிவித்தார். தான் பார்க்க சென்றால்கூட முந்தைய இரவு ஹோமுக்கு அழைத்து தகவல் தெரிவித்துவிடுவேன் என மேன்சன் கூறியுள்ளார். கோவிட் லாக்டவுனுக்குப் பிறகு பெரும்பாலான நேரங்களை தன்னுடன் செலவிட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ள மேன்சன், ஒரு சில நேரங்களில் அவரை பார்க்க செல்லும்போது சுட்ச்கிளிஃப் சொல்லும் ஆசைகள் இதயத்தை நொறுக்குவதாக இருப்பதாக கூறியுள்ளார்.
அதாவது, "நான் அவருடன் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது சுட்ச்கிளிஃபின் ஆசை. ஒவ்வொரு முறை அவரை பார்க்க செல்லும்போதும், இந்த முறை என்னுடன் நீ அமர்ந்து சாப்பிட வேண்டும் எனக் கூறுவார். அவரின் அந்த வார்த்தைகள் என் இதயத்தை நொறுக்கிவிடும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், என்னால் அவருடன் அமர்ந்து சாப்பிட முடியாது" என சுட்ச்கிளிஃபின் தோழியான மேன்சன் கூறியுள்ளார். கோவிட் வைரஸ் வேகமாக பரவினாலும், சுட்ச்கிளிஃப் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் மேன்சன் கூறினார்.
Comments
Post a Comment