நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நியூயார்க்கில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் 5 டன் ஆக்சிஜன் செறிவூட்டிகள்

நியூயார்க்கில் இருந்து 5 டன் ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகின்றன.
வாஷிங்டன்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். 

இதனால், நாட்டில் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்பி வருகிறது. 

இந்த நிலையில் இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து, சுமார் 5 டன் எடை கொண்ட 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த விமானம் இன்று மதியம் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கொரோனா பேரிடர் காலத்தில் அமெரிக்காவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்த போது, இந்திய அரசாங்கம் அமெரிக்காவிற்கு வேண்டிய உதவிகளை செய்தது. அதே போல தக்க சமயத்தில் இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா உறுதியுடன் உள்ளது என அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!